பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்347

நிலையும்" என்னும் விதிகளானே, அகரம்பெற்று வருமொழி வல்லெழுத்து
மிக்கு வெரிநத்தோல் என்றாயிற்று.

      அரவுரி வள்பு கண்டன்ன பீலிப்போழ்: முழுமயிர்மிடைந்த
பீலிப்போழ் எனத் தனித்தனி கூட்டுக. வள்பு - வார்; அடையற் செருப்பு:
பண்புத்தொகை . அடையல் - செருப்புவகையினுள் ஒன்று.

      பவளம்போலும் நிறமுடைய அடையல், தைப்பமை அடையல்,
வெரிநத் தோலோடு பீலிப்போழும் கொண்டு புனைந்த அடையல் எனத்
தனித்தனி கூட்டுக.

      (பரிமே.) தாளியை தைப்பமை என்பனவும் அடையலென்பதனோடு
இயையும். அடையல் - அடையற்செருப்பு.

8 - 15: கையதை . . . . . . . . குன்றம்

      (இ - ள்.) கையதை - பெருமானே நினது கையின்கண் ஏந்தியது,
கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து - நின்னைத் தலைவனாகக்
கொள்ளாத நின் பகைவராகிய அவுணர் தமக்குத் தலைவனாகக் கொண்ட
சூரபன்மாவினை வேரொடு துணித்தொழித்து மேலும், புள்ளொடு பெயரிய
பொருப்புப் புடைதிறந்த வேல் - கிரௌஞ்சம் என்னும் ஒரு பறவையினது
பெயரையுடைய மலையினது பக்கத்தைக் குடைந்து வழிதிறந்த
வேற்படையாகும்; பூண்டதை - நீ அணிந்து கொண்டது, சுருள் உடை
வள்ளிஇடை இடுபு இழைத்த - சுருளுதலையுடைய வள்ளிப்பூவினை
இடையிடையே இட்டுத் தொடுத்த, கடம்பின் ஒன்றுபட கமழ் உருள்
இணர்தார் - கடம்பினது ஒருசேர மலர்ந்து நறுமணங் கமழாநின்ற
தேருருள் போன்ற பூவினாலியன்ற மாலையாகும்; அமர்ந்ததை -
பெருமானே நீ வீற்றிருந்தது, புரையோர் நாவின்புகழ்நலம் முற்றி -
உயர்ந்தோருடைய செந்நாவானே புகழப்படும் நன்மை நிறைந்து, ஏழ்
நிரை அடுக்கிய நீள்இலை பாலை - ஏழுஏழாக நிரல்பட அடுக்கிய
இலைகளையுடைய பாலைமரத்தினையுடைய, அரைவரை மேகலை -
இடைமலையாகிய இலகடத்தினையும் அணிநீர்ச் சூழி - அழகிய
அருவிநீர் ஆகிய முகபடாத்தினையும் உடையதொரு (யானை போன்ற,)
தரை விசும்பு உகந்த தண்பரங்குன்றம் - நிலத்தின்கணின்று வானுற
உயர்ந்த தண்ணிய திருப்பரங்குன்றம் என்னும் திருப்பதியாகும்;

      (வி-ம்.) கொள்ளாத் தெவ்வர் - நின்னை இறைவனாகக் கருதாத
பகைவராகிய அவுணர் என்க. மாமரம் என்பதற்கேற்ப 'முதல்தடிந்து'
என்றார். புள் - கிரௌஞ்சம்; அன்றில். புள்ளொடு பெயரிய பொருப்பு
என்றது, கிரௌஞ்சமலையை. புடை - பக்கம். பூண்டதை - பூண்டது;
பூண்டது கடம்பின் இணர்த்தார் என்க. கடப்பமாலை முருகனுக்கு
அடையாளப் பூமாலை. இதனை,