பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்349

இம்மையிற் போல எளியேங்கட்கு மறுபிறப்பினும் கூட்டுக என்று, நின்
தொழுது பரவுதும் - நின் திருவடிகளைக் கை குவித்துக் கும்பிட்டு
வேண்டாநின்றேம்; அருள்புரிவாயாக;

      (வி-ம்.) குன்றம் - அத் திருப்பரங்குன்றம் என்றவாறு. இம்மையில்
மேலைச்செய்த தவத்தால் இயைந்தது; மறுமையினும் இங்ஙனமே இயையச்
செய்வாய் என்பதுபட இயைக்க என்றார்.

      வெற்றியில்வழி கொடிக்கு அழகின்மையால் வென்றிக் கொடியணி
செல்வ என்றார். வென்றியாற் கொடியை அணிந்த செல்வ என்க. செல்வ
- எம்மனோர்க்குச் செல்வமாக இருப்பவனே என்க.

18 - 29: சுடுபொன் . . . . . . . . .குன்றின்மிசை

      (இ - ள்.) மாதடிந்திட்டோய் நின் குன்றின்மிசை - சூர்மாவைத்
தடிந்த வேற்படையையுடைய பெருமானே நினது திருப்பரங்குன்றின்கண்,
சுடுபொன் ஞெகிழத்து முத்து அரிசென்று ஆர்ப்ப - சுட்டுத் தூய்மை
செய்யப்பட்ட பொன்னாலியற்றிய சிலம்பின் அகத்தேயிடப்பட்ட
முத்தாகிய பரல் எங்கும் கேட்ப ஆரவாரஞ் செய்ய, அடி துடியின்
பெயர்த்து - அடிகளைத் துடியினது இசைக்குப் பொருந்துமாறு
பெயர்த்திட்டு, தோள் தூக்கி அசைத்து - கைகளை எடுத்து அசைத்து,
அடு நறா மகிழ் தட்ப - சமைத்த கள்ளினது களிப்புத் தன்னைத் தடா
நிற்கவும், ஆடுவாள் தகைமையின் - கூத்தாடாநின்ற விறலியினது அழகு
காரணமாக, இலங்கு நுனை எஃகு எனச் சிவந்த நோக்கமொடு -
விளங்குகின்ற நுனையினையுடைய வேல் போலச் சிவந்த பார்வையோடே,
துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நினையும் - தனக்குத்
துணையாய்த் தன்பக்கலிலே. இரா நின்ற தன் கணவனோடு
ஊடுவாளுடைய மெய்ப்பாட்டின் நிலைமையினையும்; நிழல் காண்
மண்டிலம் நோக்கி அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்
- இவ் விறலியினும் மிக்க அழகு தனக்கு உண்டாயவிடத்துத்
தன்கேள்வன் இவ்வாடல் மகளை நோக்கான் என்று கருதித் தன்
உருவத்தின் நிழலைக் காண்டற்குரிய கண்ணாடி வட்டத்தை நோக்கித்
தீப்போலச் சுடரும் தன் அணிகலன்களை அழகுறச்
சீர்திருத்துவாளொருத்தியின் மெய்ப்பாடும், பொதிர்த்த முலையிடை
சந்தனம் பூசி உதிர்த்துப் பின் ஊற ஊட்டுவாள் விருப்பும் - பொங்கிய
முலையின்மேல் சந்தனத்தைப் பூசி இவற்றின்கண் மணம் நிலை
பெற்றவிடத்துத் தன் கணவன் அப்பரத்தையைக் கருதாது என்னையே
தழுவுவன் என்னும் கருத்தால் மேலும் மணமுடைத் தாக்குதற்குப்
பூசப்பட்ட அச் சந்தனத்தை உதிர்த்து மீண்டும் மீண்டும் பூசா நிற்கும்
இவளுடைய காமவிருப்பந்தோன்றும் மெய்ப்பாட்டினையும், பல்லூழி
இவை இவை - இவ்வாறே பன் முறையும் நிகழா