பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்351

      25 - 6. பொங்கின முலையிடத்தே சந்தனத்தைப் பூசியுதிர்த்து
நாற்றம் நிலைபெற்றவழி என்னைத் தழுவுமென்று கருதி அதனைப்
பின்னும் பின்னும் ஊட்டுவாள்.

      28. ஓவியத்து அழகுபோலும் என்றார், அவ்வொரு தொழிற்
கண்ணே நிற்றலான்.

30 - 38: மிசைபடு . . . . . . . குன்று


      (இ - ள்.) இரங்கும் முரசினான் குன்று - முழங்கும் வெற்றி
முரசினையுடைய முருகவேளினது திருப்பரங்குன்றத்தில், எழிலி இசைபடும்
பக்கம் - முகில் முழக்கம் உண்டாயவிடத்து. விடு பொறி மஞ்ஞை -
சுடர்விடாநின்ற புள்ளிகளையுடைய மயில்கள், மிசைபடு சாந்தாற்றி போல
- மேலே எடுத்து அசைக்கப்பட்ட ஆலவட்டத்தைப் போன்று, இருபாலும்
கோலி - தம் இரண்டு இறகுகளையும் விரித்துக் கொண்டு, உடன் பெயர்பு
ஆட - பலவும் ஒன்றுகூடி எழுந்து கூத்தாடாநிற்ப, முரல் குரல் தும்பி -
இசைபாடுகின்ற குரலையுடைய தும்பிகள், விரல் செறி விடு தூம்பின்
துளைக்கு ஏற்ப - விரலைச் செறித்தும் விட்டும் இசை யெழுப்புகின்ற
குழலின் துளையினின்று எழா நின்ற இசைக்குப் பொருந்தும்படி, அவிழ்
மலர் ஊத - மலர்ந்த மலரிடத்தே பாடா நிற்ப, யாணர் வண்டு இனம்
யாழ் இசை பிறக்க - மலராகிய புது வருவாயினையுடைய வண்டினது
திரள் யாழினது இசை போலும் தமது இசையை மேன்மேலும் மிகுவிப்ப.
அருவி நீர் பாணி முழவு இசை ததும்ப - அருவிநீர் தாளத்தையுடைய
மத்தள முழக்கம் போன்று முழங்காநிற்ப, பரந்தவை எல்லாம் ஒருங்கு
ஒலிக்கும் - இவ்வாறாகப் பலவிடத்தினின்றும் பரவிய இசைகள் எல்லாம்
ஒருங்கே ஒலிக்கும்;

      (வி - ம்.) முரசினான் குன்றின்கண் மஞ்ஞை ஆட, தும்பிபாட
வண்டுபாட, அருவிநீர் முழங்க, இங்ஙனமாகப் பலவிடத்தும் பிறந்த
பலவேறு இசைகளும் ஒருங்கே ஒலிக்கும் என்க. எனவே
திருப்பரங்குன்றம் இயற்கையிலேயே ஆடல் பாடலாகிய
கலையின்பங்களை எஞ்ஞான்றும் உடைத்து என்பதாயிற்று.

      எழிலி - முகில். எழிலி இசைபடுபக்கம். மஞ்ஞை மிசைபடு
சாந்தாற்றிபோல இருபாலும் கோலி ஆட என இயைத்துக் கொள்க.
முகில் முழக்கம் கேட்டவுடன் மயில்கள் களித்து ஆடுதல் இயல்பு.
இசைபடு பக்கம், முழக்கம் உண்டாய விடத்தென்க. சாந்தாற்றி -
மயிற்பீலியாற் செய்ததோர் ஆலவட்டம். இருபால் - இரண்டு இறகும்.
கோலுதல் - வளைய விரித்தல். மஞ்ஞை - மயில். பெயர்பு - எழுந்து.
விரலைச் செறித்தும் விட்டும் இசை யெழுப்பும் தூம்பின் துளை என்க.
தூம்பு - குழல். துளை: ஆகுபெயர். முரல் குரல்: வினைத்தொகை. ஊத
- பாட. யாணர் - புதுவருவாய், வண்டிற்குப் புதுவருவாயாவது
மேன்மேலும் மலர்கள் மிக்கு மலர்தல் தும்பி, வண்டு என்பன,
வண்டின் வகை. பிறக்க - மிகுவிக்க. பிறக்குதல்