பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்353

விளையாட்டு வகையானே தம்முள்ஒருவர் துயரை ஒருவர் கண்டு
இன்புறு மியல்புடையராதலை,
"புல்லா திராஅப் புலத்தை யவருறும்
அல்லல்நோய் காண்கஞ் சிறிது"
(1303)
எனவருந் திருக்குறளானும் உணர்க. மகிழ் - இன்பம். புனல் வீழ்ந்து
என்றமையால் கேள்வன் கரைக்கண் நின்றான் என்பது பெற்றாம்.

(பரிமே.) 44. மகிழ்தூங்கி - இன்புற்று.

45. தகைவகைத்து - தன்மையினையுடைத்து.

46 - 53: வண்டார் . . . . . . . நன்குடைத்து

      (இ - ள்.) (35) பசும்பூண் சேஎய் - பசிய பொன்னணிகலன்
அணிந்த செவ்வேளே!. அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த நின்
குன்றம் - இடையறாது ஒழுகாநின்ற அருவிநீர் அரிய முழையின்கண்ணே
பரந்த நின்னுடைய திருப்பரங்குன்றம், மைந்தர் - ஆடவர், வண் தார்
பிறங்கல் நீவிய - வளவிய மலர் மாலையணிந்த தமது மலையை யொத்த
மார்பின்கண் பூசிய, சாந்தம் தண் கமழ் தைஇய வளியும்-சந்தனத்தினது
குளிர்ச்சியையும் நறுமணத்தையும் தடவி ஏற்றுவரும் காற்றும், கயல் புரை
கண்ணியர் கமழ்துகள் உதிர்த்த புயல்புரை கதுப்பகம் உளரிய வளியும் -
கயல்மீனை ஒத்த கண்ணையுடைய மகளிருடைய நறுமணங்கமழ் தாது
உதிர்க்கப்பட்ட முகிலை ஒத்த கூந்தலினூடே புக்கு அசைத்த மணக்
காற்றும், உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு - தேருருள் போன்ற
பூக்களையுடைய கடம்பின்கண் மேவிய நெடிய வேளாகிய நினக்கு,
எடுத்த புகை முருகு கமழ் வளியும் - பூசையின்கண் காட்டும்
பாத்திரத்தே எடுத்த நறுமணப் புகையினூடே புக்கமையாலே
அந் நறுமணத்தை ஏற்றுக் கமழா நின்ற காற்றும் ஆகிய இந் நறுமணக்
காற்றுக்களை, நன்கு உடைத்து - மிகவும் உடைத்து.

      (வி - ம்.) சேஎய் நின்குன்றம் சாந்தம் தைஇய வளியும், கதுப்பகம்
உளரிய வளியும், நினக்கு எடுத்த புகை நுழைந்த முருகுகமழ் வளியும்
மிகவும் உடைத்து என்பதாம்.

      வண்டார் - வளவிய தார்; வண்டுகள் ஆரவாரித்தற்கிடமான
எனினுமாம். பிறங்கல் - மலை. மார்பிற்கு ஆகுபெயர். சாந்தம் தண்கமழ்
தைஇய வளி என மாறுக. வளி - காற்று. கயல் - ஒருவகை மீன். புரை:
உவமவுருபு. கமழ்துகள் என்றது நறுமணப்பொடியை. இஃது அக்காற்று
மணமுடைத்தாதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. நெடுவேட்கு -
நெடுவேளாகிய நினக்கு.

      எடுத்த புகை நுழைந்த முருகு கமழ் வளி என மாறுக. அசும்பும்
- ஒழுகும். விடர் - வெடிப்பு; முழை. முருகு - மணம். நன்குடைத்து -


ப.--23