பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்354

மிகவும் உடைத்து. நன்கு என்பது மிகுதிப்பொருள் தருதலை, இந்நூலின்
கண் 16 ஆம் பாடலின்கண் (15) "நரந்த நறுமலர் நன்கு அளிக்கும்மே"
என்புழியும் காண்க.

      (பரிமே.) 46. பிறங்கற்கண்.

      47. சந்தனத்தைத் தடவிப் புலர்த்தும் காற்றும்.

      48-9. கமழ்தாதுதிர்த்த கதுப்பகத்தை ஊடுபுக்கு அசைத்த காற்றும்.

      50-51. கடம்பின்கண் மேவிய நினக்குப் பூசைக்கட் காட்டும்
பாத்திரத்தெடுத்த கமழ்புகையூடு நுழைந்த காற்றும்.

      50. நெடுவேள்: முன்னிலைப் பெயர்.

      47 - 53. பலவகை நறுநாற்றமுடைமை கூறியவாறு.

54 - 65: கண்ணொளிர் . . . . . . .கண்


      (இ - ள்.) இடு சுடர்படர் கொடி மின்னுப்போல் கண் ஒளிர் திகழ்
அடர் இடை இடை நெறிபெற ஒண்ணகை தகை வகை இழைத்து யாத்த
செண்ணிகை - முகில் இடாநின்ற ஒளி படர்ந்த மின்னற்கொடி போன்று
காண்போர் கண்ணுக்கு ஒளி வீசித் திகழும் பொற்றகட்டின்
இடையிடையே அறல்படும்படி ஒள்ளிய சுடரும் அழகின் கூறுபாடும்
பெற இழைத்துச் செய்த தலைக்கோலங்களாகிய, கோதை கதுப்போடு
இயல் - மாலை கூந்தலோடே அசையவும், மணி மருள் தேன் மகிழ்
தட்ப - மாணிக்கம் போன்ற சிவந்த நிறமுடைய தேனாற் சமைத்த
கள்ளினையுண்டமையால் உண்டாய களிப்புத் தடை செய்யாநிற்பவும்,
பைந்துகில் பிணி நெகிழ நோக்கம் சிவப்பு ஊர - பசிய ஆடை
கட்டவிழா நிற்பவும் கண்கள் சிவக்கவும், பூங்கொடிபோல ஒல்கி
நுடங்குவாள் - பூங்கொடி போல அசைந்து ஆடுபவளாய், ஆங்குத்
தன் சீர்த்தகு கேள்வன் - அவ்விடத்தே தனது அழகுக்கு
ஏற்ற தன் கொழுநன், துடி உருட்டும் சீரால் - துடியென்னும் தோற்கருவியை
இசைக்கும் தாளத்திற்குப் பொருந்த, கோடு அணிந்த முத்தாரம் ஒல்க
- தனது முலைக்கண் அணிந்த முத்துமாலை அசையவும், ஒசிபவள் ஏர்
- ஆடுவாளது அழகு, வாடையுளர் ஆடை அசைய அணி யசையத் தான்
அசையும் கொம்பர் போன்ம் - வாடையால் உளரப் பட்டுத் தனது
ஆடை அசையவும் அணிகலன் அசையவும் ஆடுவதொரு பூங்கொம்பு
உலகின் உளதாயின் அதன் அழகினையே ஒக்கும், துடிச்சீர்க்கு
ஊழ்தோள் பெயர்ப்பவள் கண் - அவன் கொட்டுந் துடியினது
தாளத்திற்கியைய முறையாகத் தனது தோளை அசைப்பவளின் கண்கள்,
புரள்பவை வாளி