பக்கம் எண் :

பரிபாடல்- வையை359

   கவர்தொடை நல்யாழ் இமிழக் காவிற்
   புகர்வரி வண்டினம் பூஞ்சினை இமிர
40 ஊதுசீர்த் தீங்குழல் இயம்ப மலர்மிசைத்
   தாதூது தும்பி தவிர்பல வியம்ப
   . . .துடிச்சீர் நடத்த வளிநடன்
   மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க
   ஆங்கவை தத்தந் தொழின்மாறு கொள்ளும்
45 தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையாற்
   கோடுளர் குரற்பொலி யொலிதுயல் இருங்கூந்தல்
   . . . . . . . . . புரைதீர் நெடுமென்
   தோடாழ்பு தழைமலர் துவளா வல்லியின்
   நீடாழ்பு தோக்கை நித்தில வரிச்சிலம்பு
(இப் பாடலின் இறுதிப் பகுதி கிடைத்திலது.)

உரை

1 - 11: ஒளிறு . . . . . . . வயல்புகுத

      (இ - ள்.) கொண்மூ ஒளிறுவாள் பொருப்பன் உடல் சமத்து
இறுத்த களிறு நிரைத்தவை போல் நெரிதர - முகில விளங்காநின்ற
வெற்றிவாளை யேந்திய பாண்டியமன்னன் தன் பகைவரோடே
பொருதுகின்ற போரின்கண் அப் பகைவர் இறைப்பொருளாகக் கொடுத்த
களிற்றுயானைகளை வரிசையாக நிறுத்திய அணியைப் போன்று
வானத்தின்கண் நெருங்கி, ஒடுங்கார் அரசுபடக் கடந்த ஆனாச்
சீற்றத்தவன் அதிர்பவை முரசுபோல் முழங்கு இடி பயிற்றி - ஓடாநின்ற
அம் முகில்கள் தன் பகை வேந்தர்கள் மாளும்படி கொன்று வென்ற
அமையாத சினத்தையுடைய அப் பாண்டியனுடைய முழங்கு வனவாகிய
வெற்றிமுரசங்கள் போன்று முழங்காநின்ற இடியை எறிந்து, அவன்
தானை உடன்று வில்விசை விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ
- அம் மன்னன் தன் பகைப் படையைப் பொருது தன் வில்லினின்றும்
விசையுடன் ஏவா நின்ற அம்பிற்கு ஒப்பாகும்படி விரைந்த துளிகளைச்
சிதறி, கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி - அவன் ஏந்திய கண்ணுக்கு
ஒளிரும் வேல்போன்று கடிதாக மின்னுதலைச் செய்து, அவன் வண்மை
போல் வானம் பொழிந்த நீர் - அப் பாண்டியனது வள்ளன்மையைப்
போன்று அவ் வானத்தினின்றும் பொழியப்பட்ட மழைநீர், ஊக்கத்தின்
ஊழிபோன