நூறு கைகளையுடைய ஆற்றலுடையோனே!, விரித்த ஆயிரம் கைமாய
மள்ள - விரித்த ஆயிரங் கைகளையுடைய மாயம்வல்ல மறவனே!,
பதினாயிரங்கை முதுமொழி முதல்வ - பதினாயிரங் கையினையுடைய
வேத முதல்வனே!, நூறாயிரங்கை ஆறு அறி கடவுள் - நூறாயிரங்
கையினையுடைய ஆறாவதனால் அறிதற்குரிய இறைவனே!, அனைத்தும்
அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா
யாக்கையை - மேற்கூறப்பட்ட எண்கள் எல்லாம் கிடக்கப் பலவாக
அடுக்குதலையுடைய ஆம்பல் என்னும் பேரெண்ணாலும் இவ்வளவு
என்று எண்ணின் வரம்புகூற அறியாத உடலினையுடையவனே!,
(வி - ம்.) நகை - மகிழ்ச்சி; அமிழ்தம் பங்கிட்ட
காலத்தே
திருமால் மோகினியாக வடிவங்கொண்டு வந்தாராக, அவ் வடிவத்தைக
் கண்ட அளவிலே அவுணர் மயங்கி அமிழ்துண்ணலை மறந்து
மகிழ்ச்சியுற்றனர்; அம் மகிழ்ச்சியே பின்னர் அவர்க்கு அச்சமாய் மாறி
விட என்பார், 'நகையச்சாக' என்றார். அச்சு - அச்சம்.
அவுணரும்அமரரும் சேர்ந்து
கடைந்தெடுத்த அமிழ்தம் இருசாரார்க்கும்
பகுத்துக் கொடுக்கப்படுதலே நடுநிலைமை ஆகவும் அவருள்
ஒருதிறத்தாராகிய அவுணர்க்குக் கொடாமல் அமரர்க்கே வழங்கிய செயல்
நடுவு நிலை திறம்பிய செயலாகும் என்க.
இனி, இறைவன் எண்ணிறந்த செயல்களை இடையறாது
செய்து
கொண்டிருத்தலால் இவ் வியல்பினைச் செயல் செய்தற்குரிய கையின்
மேலிட்டு எண்ணிறந்த கைகளையுடையோய் என்பார்
'முக்கை முனிவ . . . . . . . நூறாயிரங்கை ஆறு அறிகடவுள்' என்றார்.
எல்லாப் பொருளும் இறைவன் வடிவமே ஆதலான் அவையும்
எண்ணிறந்தன என்பார், 'இனைத்தென எண்வரம்பு அறியா யாக்கையை'
என்றார். முனிவ! அண்ணல்! மைந்த! நெடுவேள்! ஏந்தல்!
மன்பேராள! மதவலி! ஆற்றல்! மாயமள்ள! முதுமொழி முதல்வ!
ஆறறி கடவுள்! என்னும் விளியேற்ற பெயர்கள் இறைவனுடைய
பல்வேறு தன்மைகளையும் குறித்து நிற்றல் உணர்க. முனிவ என்றற்குப்
பற்றில்லாதவனே என்றும், அண்ணல் என்பதற்குத் தலைமைத்
தன்மையுடையவனே என்றும் இங்ஙனமே அனைத்திற்கும் பொருள்
விரித்துக்கொள்க. ஆறு - ஆறாவதாகிய மனனுணர்ச்சி.
மனனுணர்ச்சியாலுணர்தற்குரிய கடவுளே! என்க. என்னை?, "பொங்கிய
முற்றியவால் உணர்வினுக்கு அணுகுங் காட்சியான்" எனப் பிறரும்
கூறுதல் காண்க. (எனவே ஐம்பொறிகளானும் உணரப்படாதவன் கடவுள்
என்பதும் கொள்க.) எண்களின் இறுதியினின்ற ஆம்பல் என்னும்
பேரெண்ணை ஆம்பல் ஆம்பல் என ஊழிபல நின்றடுக்கினும்
இறைவனுடைய யாக்கைக்கு எண்வரம்பிடலாகாது என்றவாறு.
(பரிமே.) 31. கூந்தலையுடைய மாவை 'கூந்தல்' என்றும்,
பெயரினையுடைய வடிவைப் 'பெயர்' என்றும் கூறினார் ஆகுபெயரான்.
கேசி - குதிரையாய் வந்து பொருதானோ ரசுரன்.
இப் பெயர்
கேசமென்னும் வடமொழி முதனிலையாக முடிந்தமையின் அதன்
பொருண்மைபற்றிக் 'கூந்தல்' என்றார்.
|