32. எண்ணிறந்தமையான் நின் கைகள் நின்புகழை ஒத்தன,
கடந்தன, கழிந்தன, என்பனபோல உருவின் என்பது ஈண்டு உவமச்
சொல்லாய் நின்றது.
36 - 44. தனக்கொரு வடிவும் பெயரும் இன்றி அன்பராயினார்
கருதிய வடிவே வடிவாகவும், அவர் இட்ட பெயரே பெயராகவும்
உடையனாதலின் 'முக்கைமுனிவ' என்பது முதலாக 'நூறாயிரங்கை
ஆறறி கடவுள்' என்பது ஈறாக வடிவு வேற்றுமையும் பெயர்
வேற்றுமையுஞ் சொல்லப்பட்டன.
46 - 53: நின்னைப்புரை . . . . . . . முதல்வனீ
(இ-ள்.) நின்னைப் புரை நினைப்பின் நீ அல்லது
உணர்தியோ
- பெருமானே! நின்னை உயர்வு கூறக் கருதில் அதனை நீயே
உணரினல்லது பிறரான் உணரப்படுவாயோ?, முன்னை மரபின் முதுமொழி
முதல்வ - அநாதியாய் வருகின்ற முறைமையினையுடைய வேதத்திற்கு
முதல்வனே!. விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பற்பல
கிளைகளாக விரிந்து பரந்த ஆகமங்கள் எல்லாவற்றானும், வலியினும்
- அகங்காரத்தானும், மனத்தினும் - நெஞ்சத்தானும், உணர்வினும்
- அறிவானும், எல்லாம் - இன்னோரன்ன பிற கருவிகளானும், நினக்கு
வனப்பு வரம்பு அறியா மரபினோய் - நின்னுடைய வனப்பும் எல்லையும்
அறியப்படாத முறைமையினையுடையோய், பிறைவளர் நிறைமதி
- பிறையாகத் தோன்றி நிறையும் இயல்புடைய திங்களினது, அணி நிழல்
வயங்கு ஒளி ஈரெண் தீம் கதிர் உண்டி - அழகிய குளிர்ச்சியோடு
விளங்கும் ஒளியாகிய பதினாறுகலைகளாகிய இனிய நிலவாகிய
உணவினையும், அணி மணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வன் நீ
- அழகிய மணிகளாலியற்றிய பசிய அணிகலன்களையும் உடைய
தேவர்களுக்குத் தலைவன் நீ;
(வி-ம்.) நினக்கு உயர்வு கூறக் கருதின் நீயே அதனை
உணரக்
கூடுமல்லது பிறர் உணரக்கூடாத உயர்வினையுடையை நீ என்பது கருத்து.
புரை - உயர்வு; "உரு உட்காகும் புரை உயர்வாகும்" (சொல் - உரி: 4)
என்பது தொல்காப்பியம். முன்னை மரபு - அநாதியாய் வரும் முறைமை.
முதுமொழி - வேதம். கேள்வி - ஆகமங்கள். ஆகமங்கள் அனைத்தும்
வேதத்தினின்றே விரிந்து பரந்தன ஆகலான், விரிந்து அகன்ற கேள்வி'
என்றார். நான் என முனைத்தெழுதலின் அகங்காரத்தை 'வலி' என்றார்.
வலி: ஆகுபெயர். மனம் - உட்கருவிகளுள் ஒன்று. உணர்வு - அறிவு.
வனப்பு என்றது. இலக்கணத்தை. இறைவனது இலக்கணத்தையும்
எல்லையையும் கேள்வி முதலிய கருவிகளால் உணரவியலாது என்பது
கருத்து. பிறைவளர் நிறைமதி - பிறையாய்ப் பிறந்து நாடோறும் வளர்ந்து
நிறைகின்ற திங்கள் என்க. நிறைமதி அணிநிழல் வயங்கொளி யீரெண்
தீங்கதிர் உண்டி என மாறுக. தேவர்கள் திங்களின் கலைகளை
நாடோறும் உண்பர் என்பது புராணம். |
|
|
|