பக்கம் எண் :

பரிபாடல்- வையை387

   மாநிலந் தோன்றாமை மலிபெயல் தலைஇ
   ஏமநீர் எழில்வான மிகுத்தரும் பொழுதினான்
   நாகநீண் மணிவரை நறுமலர் பலவிரைஇக்
   காமரு வையை கடுகின்றே கூடல்
 5 நீரணி கொண்டன்று வையை யெனவிரும்பித்
   தாரணி கொண்ட வுவகை தலைக்கூடி
   ஊரணி கொல மொருவ ரொருவரிற்
   சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு
   நீரணி கொண்ட நிறையணி அங்காடி
10 ஏரணி கொண்டார் இயல்;
   கைபுனை தாரினர் கண்ணியர்
   ஐயெனு மாவியர் ஆடையர்
   நெய்யணி கூந்தலர் பித்தையர்
   மெய்யணி யானை மிசையராய் ஒய்யெனத்
15 தங்காச் சிறப்பிற் றளிரியலார் செல்லப்
   பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர்
   வையமுந் தேரும் அமைப்போரும் எவ்வாயும்
   பொய்யாம்போய் என்னாப் புடைகூட்டிப் போவநர்
   மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக்
20 கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார்
   ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார்நக்
   கோடுவார் ஓடித் தளர்வார்போ யுற்றவரைத்
   தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக்
   கற்றாருங் கல்லா தவருங் கயவரும்
25 பெற்றாரும் பெற்றார்ப் பிழையாத பெண்டிரும்
   பொற்றேரான் றானும் பொலம்புரிசைக் கூடலும்
   முற்றின்று வையைத் துறை;
   துறையாடுங் காதலர் தோள்புணை யாக
   மறையாடு வாரை யறியார் மயக்கிப்
30 பிறையேர் நுதலியர் எல்லாருந் தம்முன்
   நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே
   இகல்பல செல்வம் விளைத்தவட் கண்டிப்பால்
   அகல் அல்கும் வையைத் துறை;
   காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி