பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்4

   இருவர் தாதை இலங்குபூண் மாஅல்
   தெருள நின்வர வறிதல்
30 மருளறு தேர்ச்சி முனிவர்க்கும் அரிதே;
(இஃது ஆசிரியம்)
   அன்ன மரபின் அனையோய் நின்னை
   இன்னனென் றுரைத்தல் எமக்கெவன் எளிது;
(இது பேரெண்)
   அருமைநற் கறியினும் ஆர்வ நின்வயிற்
   பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை
   மெல்லிய எனாஅ வெறாஅ தல்லியந்
   திருமறு மார்பநீ அருளல் வேண்டும்;
(இஃது ஆசிரியம்)
   விறன்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும்
   அறனும் ஆர்வலர்க் களியு நீ
   திறனிலோர்த் திருத்திய தீதுதீர் சிறப்பின்
40 மறனும் மாற்றலர்க் கணங்கு நீ (40)
   அங்கணேர் வானத் தணிநிலாத் திகழ்தரும்
   திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ
   ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
   மைந்துடை யொருவனு மடங்கலு நீ
45 நலமுழு தளைஇய புகரறு காட்சிப்
   புலமும் பூவனு நாற்றமு நீ
   வலனுயர் எழிலி மாக விசும்பும்
   நிலனு நீடிய இமயமு நீ;
(இவை ஆறும் பேரெண்)
   அதனால்,
(இது தனிச்சொல்)
50 இன்னோர் அனையை இனையை யாலென
   அன்னோர் யாமிவண் காணா மையின்
   பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய
   மன்னுயிர் முதல்வனை ஆதலின்
   நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே.
(இது சுரிதகம்)
55 நின்னொக்கும் புகழ்நிழலவை
   பொன்னொக்கும் உடையவை
   புள்ளின் கொடியவை புரிவளை யினவை