அணர் - கிளர்ந்த: ஆயிரந்தலையரவு - ஆதிசேடன். அரவு
என்புழி உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
நிலந்தாங்கும் பேராற்றலுடைய ஆதிசேடனையும் தன் வாயிற்கொண்ட
ஆற்றலுடைய நின் ஊர்திச் சேவலும் என்க.
'காலமுதல்வன்' என்றது ஏனை எப்பொருட்கும் முதலாகிய
காலத்திற்கும் முதல்வன் நீ என்றபடியாம். முதல்வனை என்புழி, ஐ:
சாரியை.
ஏஎ - சாமவேதம்: ஆகுபெயர். ஏஎ என்னும்
இசையினையுடையது என்பது பொருள். இனைமை - இத்தன்மை.
நற்கு - நன்கு.
(பரிமே.) 59 - 61: என்றது நீ இந்திரற்கு இளையோனாய்
அசுரரை வெல்கின்ற காலத்து இவ்வெற்றி யெல்லாம் இவனின் ஆயவல்ல;
இவனைத் தாங்கிச் செல்கின்ற என்னின் ஆய' என்று கருடன் தன்னை
வியந்திருப்ப, அக் கருத்தை ஒழித்தற் பொருட்டு 'நீ என் மெய்ம்
முழுதும் தாங்கல் வேண்டா! ஒருகையிற் சிறு விரற்றுணை தாங்கினை
எனில் நீ கூறியவாறே யாகும்' என்று அத்துணை அவன் மேல் வைப்ப,
அவ்விரற்கு ஆற்றாது பாதலத்து வீழ்ந்து நெடுங்காலம் கிடந்து துதித்தான் ; அத்தன்மைத்தாய வலி தாழக்கொண்ட மெய்களினுமுடையை என்றவாறு.
62. உபசார வழக்கால் ஏஎ என்னும் இசையுடையதனை 'ஏஎ' என்றார்.
63 - 72: தீயினுள் . . . . . . . . பிறப்பித்தோரிலையே
(இ - ள்.) தீயினுள் தெறல் நீ - நெருட்பின் கண்ணமைந்த
வெம்மை நீ, பூவினுள் நாற்றம் நீ - மலரின்கண் நீ மணமாக
இருக்கின்றனை, கல்லினுள் - மணிகளுள், மணியும் நீ - அம்மணியாந்
தன்மை நீ, சொல்லினுள் வாய்மை நீ - சொற்களுள் நீ வாய்மைத்
தன்மையாக இருக்கின்றனை, அறத்தினுள் அன்பு நீ - அறச்
செயல்களிலே நீ அன்புடைமையாக இருக்கின்றனை, மறத்தினுள் மைந்து
நீ - மறச் செயல்களிலே நீ வன்மைப் பண்பாக இருக்கின்றனை, வேதத்து
மறை நீ - வேதத்தின்கண் நீ அரும் பொருளாக வுள்ளனை, பூதத்து
முதலும் நீ - பூதங்களில் நீ அவற்றின் முதற் பொருளாய்
விளங்குகின்றனை, வெம்சுடர் ஒளியும் நீ ஞாயிற்றின் கண் நீ ஒளியாக
இருக்கின்றனை, திங்களுள் அளியும் நீ - திங்களின் கண் உளதாகிய
குளிர்ப்பண்பும் நீயேகாண், அனைத்தும் நீ-ஈண்டுக் கூறப்படாத
எப்பொருளும் நீயே, அனைத்தின் உட்பொருளும் நீ - எல்லாப்
பொருளிடத்தும் அவ்வவற்றின் உட்பொருளாய் இருக்கின்றவனும் நீயே,
ஆதலின் - நீயே பொருளும் அவற்றின் உள் ளீடுமாயிருத்தலானே,
உறையும் உறைவதும் இலை - நீ உறைதலும் இல்லை நீ உறைதற்கு
நின்னின் வேறாய் உறையுமிடமும் இல்லை, மறவியில் சிறப்பின்
உண்மையும் மாயம் - மறவியுடையார் மறதி |
|
|
|