பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை409

      இச் செய்யுட் கருத்தினைப் பிற்காலப் புலவர்கள் தத்தம் நூலில்
எடுத்தமைத்துள்ளார்கள்.
"கோதி லாதசெஞ் சூட்டுடை வாரணம் கூவ
ஓத ஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பார்
ஈத லேற்றலோ டறுதொழி லிருபிறப் பாளர்
வேத நாதத்தின் விழிப்பதவ் வியனகர் மாக்கள்"
(ஆப்பனூர் - 9)
என்பது திருவாப்பனூர்ப் புராணம்.

      சோழன் தலைநகரமாகிய உறையூர்க்குக் 'கோழி' என்ற பெயர்
வந்தமைக்குச் சிலப்பதிகாரத்தே நாடுகாண் காதையில்,

"முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர்"
(247-8)

எனவரும் இளங்கோவடிகளார் கூற்றும், அவ் வடிகளின் விளக்கமாக
அரும்பத வுரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் உரைப்பனவும்
உணர்க.

      "யானையைக் கோழி முருக்கலால் கோழி என்று பெயராயிற்று;
யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி
அவ்விடத்து அதன் பெயராலே சோழன் ஊர்காண்கின்ற பொழுது
சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறம்பே சிறையையுடைய கோழி
என்றாயிற்று."
- அரும்பதவுரை யாசிரியர்.


      "வாரணம் - கோழி; ஆவது உறையூர். முற்காலத்து ஒரு கோழி
யானையைப் போர் தொலைத்தலான் அந் நிலத்திற் செய்த நகர்க்குக்
கோழி என்பது பெயராயிற்று."
- அடியார்க்கு நல்லார்.