பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை410

எட்டாம் பாடல்
------
மதுரை
பொருட் சுருக்கம்

      பாண்டிய மன்னனின் பொதியில்மலை யிருக்குமளவும் மதுரை
தமிழ் நாடெங்கும் தன் புகழ் பரவப் பொலிந்து நிற்பதன்றிக் குன்ற
மாட்டாது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.
உரை


      (இ-ள்.) கொடித்தேரான் குன்றம் உண்டாகும் அளவு -
மீன்கொடியை உடைய தேரினையுடைய பாண்டிய மன்னனுக்குரிய
பொதியில்மலை இருக்கும் காலமளவும், மதுரை - அவன் தலைநகரமாகிய
மதுரை நகரம், நின்று நிலைஇ கேடின்றி நின்று நிலைத்து, தண் தமிழ்
வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம் - குளிர்ந்த தமிழ் மொழியையே
எல்லையாகவுடைய தமிழ் நாடெங்கும், புகழ் பூத்தல் அல்லது - புகழ்
பரப்பிப் பொலிவதன்றி, குன்றுதல் உண்டோ - தனது சிறப்பின்கட்
சிறிதும் குறைதல் உண்டாகுமோ? உண்டாக மாட்டாது.

      (வி-ம்.) தமிழ்மொழி வழங்கும் பரப்பினையே எல்லையாகவுடைய
தமிழ்நாடு என்க. எனவே, இப் புலவர் பெருமான் ஒரு நாட்டிற்கு
எல்லை அம் மொழி வழங்கும் பரப்பே யாகும் என நுண்ணிதின்
ஓதியது உணர்க.

      தமிழ்வழங்கும் நிலமாவன: செந்தமிழ்ப் பாண்டிநாடும், கொடுந்
தமிழ் நிலம் பன்னிரண்டுமாம். இவற்றை,

"சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
சவுந்தர பாண்டியன் எனும்தமிழ் நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப"

எனவும்,