பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை411

"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புன்னாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"
எனவும் வரும் செய்யுள்களானும் உணர்க.


      பொதியிலில் செந்தமிழ் இலக்கணம் கண்ட அகத்தியனாரும்,
மதுரையில் சங்கம் நிறுவி அச் செந்தமிழ் ஆராய்ந்த சான்றோரும்
இருத்தலால், நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது குன்றுதல்
உண்டாகாது என்றவாறு. இதனோடு,

"பொதியி லாயினும் இமய மாயினும்
. . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே"
(மங்கல வாழ்த்து.)

எனவரும் இளங்கோவடிகளார் கூற்றினை ஒப்புநோக்குக.