பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை415

வர் புத்தேள் உலகு போவார் என்க. இவ்வினா ஒருவரும் இலர்
என்பதுபட நின்றது.
புத்தேள் உலகு - வீட்டுலகம், துறக்கமுமாம்.

      மதுரையில் வாழ்வோர் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று
உறுதிப்பொருளும் உடையராய் மேலும் திருப்பரங் குன்றத்துறையும்
செம்பொருளையும் வழிபட்டு மக்கட்பிறப்பின் பயனாகிய வீடுபேறும்
எய்துவர். அவ் விடத்திலே பிறத்தற்கே முன்பிறப்பிற் றவம் செய்திருத்தல்
வேண்டும் என்பது கருத்து.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழ் முருகன்.

367 ஆம் பக்கமுதல் பின் இணைப்பாகவுள்ள
பாடல்கள் பதினொன்றுக்கும்
பெருமழைப்புலவர், பொ. வே. சோமசுந்தரனார்
எழுதிய உரையும் விளக்கமும்
முற்றின.
--------