77 - 80: பாழென . . . . . . . . சிறப்பினை
(இ-ள்.) பாழ் என-புருடதத்துவமும், கால் என-வானம்
முதலிய
ஐம்பெரும் பூதங்களும், பாகு என - வாக்கு முதலிய தொழிற் கருவிகள்
ஐந்தும், ஒன்று என - ஓசையும், இரண்டென - ஊறும், மூன்றென
-ஒளியும், நான்கென - சுவையும், ஐந்து என - நாற்றமும் ஆகிய
ஐம்புலன்களும், ஆறு என - மெய் வாய் கண் மூக்குச் செவி மனம்
என்னும் அறிகருவிகள் ஆறும், ஏழு என - அகங்காரமும், எட்டு
என - புத்தியும், தொண்டு என - மூலப்பகுதியும், எண் - ஆகிய
இவ்வெண்களானே, நால்வகை ஊழி - நால்வகை ஊழியின்கண்ணும்,
நவிற்றும் சிறப்பினை - ஆராய்ந்து கூறப்படும் பெருமையினையுடையோய்;
(வி - ம்.) தன்னிடத்தினின்றும் பிறிதொன்று
தோன்றுதலின்மையான் புருடதத்துவத்தைச் சாங்கியர் மீதம்பற்றிப் பாழ்
என்றார். கால் - முளை. பூதங்கள் ஐந்தும் தாம் பிறவற்றினின்றும்
முளைத்தலானும் தம்மிடத்தி னின்றும் பிற முளைத்தலானும் கால் என
ஆகுபெயராற் கூறப்பட்டன. கால் அப்பொருட்டாதல் "நிலத்திற்
கிடந்தமை கால் காட்டும்" (திருக்குறள். 959) என்புழியும் காண்க.
எனவென்னும் இடைச்சொல்லெல்லாம் எண்ணும்மைப்பொருளன.
பாகு - பாகுபாடு. சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல்,
இன்புறுதல் என்னும் தொழிலானே பாகுபட்டமையில் வாக்கு கால் கை
பாயு உபத்தம் என்னும் கன்மேந்திரியம் ஐந்தனையும் பாகு என்றார்.
கூறுபட்டவற்றைக் கூறு என்றாற்போல.
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஏழு எட்டு தொண்டு
என
வரும் எட்டு எண்களும் பூரணப்பொருளன. அஃதாவது: இரண்டு
முதலிய எண்ணுப்பெயர்கள் பன்மைப்பொருள் உணர்த்தாமல் தம்மால்
உணர்த்தப்படும் இறுதிப்பொருள் ஒன்றனையே உணர்த்தி நிற்பதாம்.
எடுத்துக்காட்டு: இரண்டு யானை மூன்று யானை என்புழிப் பன்மைப்
பொருள் குறித்தலும். அவற்றுள் இரண்டு பரியது மூன்று நெடியது
என்புழி இரண்டாவது மூன்றாவது எனவும் பொருள்படுமன்றே!
அங்ஙனம் பொருள்படுங்கால் இவ்வெண்கள் தமக்குரிய பன்மைப்
பொருள் குறியாது தம்மாற் குறிக்கப்படும் ஒரு பொருளையே முழுதும்
குறித்து அதற்குப் பெயராய் நிற்றல் என்க.
ஒன்று - முதற் பூதமாகிய வானத்தின் சிறப்புப் பண்பாகிய ஓசை.
இரண்டு -- இரண்டாம் பூதமாகிய காற்றின் சிறப்புப்பண்பாகிய ஊறு.
மூன்று - மூன்றாம் " தீயின் " " ஒளி நான்கு - நான்காம் " நீரின் "
"சுவை ஐந்து - ஐந்தாம் " நிலத்தின் " " நாற்றம் ஆறு - மனத்தையும்
கூட்டி ஞானேந்திரியம் ஆறும் என்றார்.
ஏழு - ஏழாவதாகிய அகங்காரம். எட்டு - எட்டாவதாகிய புத்தி. ஒன்பது
- ஒன்பதாவதாகிய மூலப்பகுதி. நால்வகை ஊழி - கிருதயுகம் திரேதயுகம்
துவாபரயுகம் கலியுகம் என்பன. |
|
|
|