(பரிமே.) 80. என்றது பூதங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள்
ஐந்தும் ஞானேந்திரியங்களைந்தும் புலன்களைந்தும் மனமுதலிய அந்தக்
கரணங்கள் மூன்றும் மூலப்பகுதியும் புருடனுமெனப்பட்ட தத்துவம்
இருபத்தைந்தனாலும் எக்காலத்தும் ஆராயப்படும் பெருமையை உடையை
என்றவாறு.
81 - 90: செங்கண் . . . . . . . . மள்ள
(இ - ள்.) செங்கண் காரி - சிவந்த கண்ணையும்
கரிய
உடம்பினையும் உடைய வாசுதேவனே, கருங்கண் வெள்ளை - கரிய
கண்ணையும் வெள்ளிய உடம்பையுமுடைய சங்கருடணனே, பொன்கட்
பச்சை - சிவந்த உடம்பினையுடைய பிரத்தியும்,கனே, பைங்கண் மால்
- பசிய உடம்பினையுடைய அநிருத்தனே, இடவல - ஆய்ச்சியரோடு
குரவைக் கூத்தாடுங்கால் அவர்க்கு இடமும் வலமும் ஆகியவனே,
குட-கூத்தாட எடுத்த குடத்தினையுடையோய், அலர் பகைவரைக்
கொல்ல எடுத்த கலப்பைப் படையினை உடையோய், கோவல
- பசுநிரை மேய்க்கும் ஆயனே, காவல - உயிர்களைக்
காத்தற்றொழிலை யுடையோனே! , காணா மரப - காணப்படாத
முறைமையினையுடையோய், நீயா நினைவ -அன்பரது விடாத
நினைவின்கண் உள்ளாய், மாயா மன்ன - அழியத நிலை
பேறுடையோனே!, உலகு ஆள் மன்னவ - உலகினை ஆளும்
அரசாகியவனே!, தொல் இயல் புலவ - பழைமையான இயலறி புலவனே
!, நல்யாழ்ப்பாண் - நல்ல யாழ் வல்ல இசைப்புலவனே, மாலைச்செல்வ
- வனமாலை அணிந்த செல்வனே, தோலாக்கோட்ட
- தோல்வியறியாத வெற்றிச்சங்கினை (இடப்பக்கத்தே) உடையோனே!.
பொலம்புரி ஆடை - பொன்னாடையினையுடையோய்!, வலம்புரி
வண்ண - வலம்புரிச் சங்கையொத்த நிறத்தையுடையோனே. பருதி
வலவ - ஆழிப்படையை வலப்பக்கத்தே உடையாய், பொருதிறல்
மல்ல - போர் செய்யும் ஆற்றல் மிக்க மல்லனே!, திருவின்
கணவ - திருமகளுக்குக் கணவனே, பெருவிறல் மள்ள - பெரிய
வெற்றியையுடைய மறவனே;
(வி - ம்.) செங்கட்காரி - வாசுதேவன். கருங்கண்
வெள்ளை
- பல தேவன். பச்சை என்றது பிரத்தியும்நன் என்னும் வடமொழித்
திரிபு. பைங்கண் மால் - அநிருத்தன். இந்நால்வரும் விட்டுணுவின்
வியூகர் எனப்படுவர்.
இடவ, வலவ எனற்பாலன ஈறுகெட்டு இடவல என நின்றன.
குட - கூத்தாடற்கெடுத்த குடத்தையுடையோய் என்க. குடக்கூத்து
என்பது திருமாலிற்குரிய கூத்துக்களுள் ஒன்று; "குடத்தாடல்
குன்றெடுத்தோ, னாடல் அதனுக்கு அடைக்குவ ஐந்துறுப் பாய்ந்து",
"வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோன் ஆடிய குட |
|
|
|