பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்44

மும்." (சிலப். 6; 54-5) "குடங்கள் எடுத்தேறவிட்டுக் கூத்தாட வல்ல
எங்கோவே." "குடமாடீ" குடமாடிய கூத்தனை." எனவரும் ஆன்றோர்
மொழிகளுங் காண்க.

      அல - கலப்பைப்படையுடையோனே. கோவலன் - இடையன்.
காவல - காத்தற்றொழிலையுடையோனே! நீயா - விட்டு நீங்காத.
நினைவ - நினைவின்கண் உள்ளோய். உலகபாலகருருவாய் நிற்றலின்
'உலகாள் மன்ன' என்றார். மாலை-வனமாலை. பொலம்புரியாடை -
பொன்னிறத்தால் மிக்க ஆடையுடையோன் என்க. பருதி - ஆழிப்படை.
வலவ - வலப்பக்கத்தே ஏந்தியவனே. கோட்ட - கோட்டையுடையவனே;
கோடு - சங்கு; ஈண்டுப் பாஞ்சசன்யம். மல்லன் - மற்போர் செய்பவன்.
மள்ளன் - மறவன்.

91 - 94: மாநில .................. நிழலே

      (இ - ள்.) முதல் முறை மாநிலம் இயலா அமையத்து - ஆதி
ஊழியின்கண் நீரினூடே பெரிய நிலம் தோன்றாத காலத்தே, நாம
வெள்ளத்து நடுவண் - அச்சந்தரும் - அப்பெரிய வெள்ளத்தின்
இடையே தோன்றியதும், வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரை
பொகுட்டு - வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரமதேவனோடு
விரிந்ததுமாகிய பொகுட்டினையுடைய உந்தித் தாமரையையுடையாய்,
நின் நேமி நிழல் - நினது நேமியே உலகிற்கு நிழலாவது.

      (வி - ம்.) நிலந்தோன்றாத ஆதியூழியில் வெள்ளத்து நடுவே
தோன்றியதும் பிரமனோடு மலர்ந்ததுமாகிய உந்தித்தாமரையை
உடையோனே நினது நேமியே உலகிற்கு நிழலாவது என்க.

      (பரிமே.) 94. தாமரைப் பொகுட்டு என்பது வரையறை
இன்மையால் சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்க
இரண்டாம் வேற்றுமைத்தொகை.