பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்46

நினக்குக் கருடக் கொடியே சிறந்த கொடி; அதனை ஒக்கும் கொடி
பிறிதில்லை. அக் கருடன் பாம்பினது உயிரையும் உடலையும் ஒருங்கே
உண்ணுவான்; அக் கருடன் இடையிலே கட்டப்பட்டதும் பாம்பு;
அவனுடைய தொடியும் முடியணியும் ஏனை அணிகலனும் பாம்புதான்;
அவன் தலையின்மேலும் சிறகின் மேலும் பாம்புகளே உள்ளன; அவனது
இரையும் பாம்பே;
      49 - 56: நீ கொடுமையுடையாரிடத்தே கொடுமையும் செம்மை
யுடையார்பால் செம்மையும் வெம்மையுடையாரிடத்து வெம்மையும்
தண்மையுடையாரிடத்துத் தண்மையும் உடையை, அவை இல்லாரிடத்தே
நீயும் அப் பண்பிலையாவாய். இங்ஙனமன்றி, உனக்குப் பகைவரும்
இல்லை; நண்பரும் இல்லை. அன்பர்கள் நெஞ்சிற் கருதிய வடிவமே
நினக்கு வடிவமாம்; நினக்கென்று தனியே வடிவமொன்று இல்லை;

      57-65: மணிமேனியிடத்தே வனமாலை யணிந்தவனே!
திருமறுமார்பனே! தாமரைக் கண்ணோய்! அளத்தற் கரியோனே!
நீ நின்னினும் சிறந்த திருவடிகளையுடையை; நிறைந்த கடவுட்டன்மை
யையுடையை; இவையல்லாத வேறு பண்புகள் பலவும் உடையை;
அவை அந்தணர் அருமறைப் பொருளாயுள்ளன யாமறிவேமல்லேம்!;

      66 - 70: நீயே ஆலின்கீழும் கடம்பினும் யாற்றிடைக்
குறையினும் மலையிடத்தும் பிறவிடத்தும் பொருந்திய தெய்வங்களாக
வேறு வேறு பெயரும் உருவமும் கொண்டு விளங்குகின்றாய்.
இவ்விடங்களேயன்றி யாண்டும் நிறைந்திருக்கின்றவனும் நீயே;

      70-73: மேலும் நின் அன்பருடைய தொழுதகைகளின்
அமைதியின் அமர்ந்திருப்போனும் நீயே: அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்த பொருளுக்குக் காவலும் நீயே!

  ஐந்திருள் அறநீக்கி நான்கின் உள்துடைத்துத்தம்
  ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
  நின்புகழ் விரித்தனர் கிளக்குங்கால் அவைநினக்
  கிறும்பூ தன்மைநற் கறிந்தே மாயினும்
5 நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்பத்
  திருமணி திரைபா டவிந்த முந்நீர்
  வருமழை யிருஞ்சூன் மூன்றும் புரையுமாமெய்
  மாஅ மெய்யொடு முரணிய வுடு்க்கையை
  நோனா ருயிரொடு முரணிய நேமியை