உரை
1 - 5: ஐந்திருள்............................கிளப்ப
(இ - ள்) ஐந்து இருள் அற நீக்கி - செவி முதலிய
ஐம்
பொறிகளாலே உண்டாகும் மயக்கமாகிய இருளைத் துவரக்களைந்து,
உள் நான்கின துடைத்து உள்ளத்தை மைத்திரி முதலிய நான்கின்
பயிற்சியால் தூயதாக்கி, தம் ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர்
- தம்மைச் சமாதியாகிய ஒரே நெறியின்கண் செலுத்திய நின்னுடைய
அன்பர், தொழுது ஏத்தி நின் புகழ் விரித்தனர் - நின்னைத் தொழுது
போற்றி நின்னுடைய புகழை விரித்து ஓதினர், கிளக்குங்கால் அவை
நினக்கு இறும் பூது அன்மை - கூறுமிடத்து அப் புகழ்கள் எல்லாம்
நினக்கு இயல்பே ஆவனவல்லது வியக்கப்படுவன அல்லாமையை,
நறகு அறிந்தேமாயினும் - எளியேங்கள் நன்றாக அறிந்துளேம்
அங்ஙனம் அறிந்து வைத்தும், ஈங்கு ஊங்கு நின் கிளப்ப - அறிந்து
கூறுந் தகுதியில்லாத யாங்களும் இங்கும் உங்குமாக அவற்றுள்
சிலவற்றைக் கூற, நகுதலும் - எம் பேதைமை கருதி நீ சிறிது நகைத்தலும்
கூடும், தகுதி - அந் நகைப்பைப் பெறுதலும் எமக்கு ஒரு தகுதியேயாம்;
ஆதலால் எளியேங்கள் நாணி நின்னைப் புகழ்தலை ஒழியேம்:
(வி - ம்.) ஐந்திருள் - பொறிகள் ஐந்தானும் உளதாகும்
மயக்கவிருள் என்க. என்னை ? அம்மயக்கம் தன்னையும் தலைவனையும்
மறைத்து நிற்றலால் இருள் எனப்பட்டது. நான்கு - மைத்திரி கருணை
முதிதை இகழ்ச்சி என்னும் நான்குமாம். இவற்றுள் மைத்திரியாவது
எவ்வுயிர்க்கும் கேண்மைபூண்டொழுகுதல். கருணையாவது
எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையராதல். முதிதையாவது
- இன்பதுன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்போதும் மகிழ்ந்திருத்தல்.
இகழ்ச்சி பொய்ப் பொருள்களிடத்துப் பற்றில்லாது அவற்றை
இகழ்ந்துவிடுதல். இந் நான்கு பாயங்களையும் கடைப்பிடியாகக்
கொண்டொழுகின் மனம் தூய்தாம் ஆதலின் 'நான்கின் உள்துடைத்து'
என்றார். ஒன்று - சமாதி கூடுதல். ஆர்வலர்-அன்பர். இறும்பூது-வியப்பு.
நீ எம்மைக் கருதி நகைப்பாயாயினும் நின் நகைப்பிற்கு யாங்கள்
பாத்திரமாகலின் அந் நகைப்பும் எங்கட்குப் பெறற்கரும் பேறே ஆகலின்,
நகுதலுந் தகுதி என்க. முறைப்படி கூறாமல் இங்குமங்குமாய்ச் சில
புகழ்களை யாங் கூறாநிற்ப என்க.
(பரிமே) 1 - 2: ஈண்டு ஐந்தென்றது ஐந்தன் காரியங்களை,
ஐந்தையும் எனவும் நான்கினானும் எனவும் வந்த முற்றும்மைகள் செய்யுள்
விகாரத்தால் தொக்கன. மைத்திரி முதலிய நான்கும் சித்தத்தை அழகு
செய்தலின் அவற்றை வடநூலார் 'சித்தபரி கருமம்' என்ப.
6 - 21: திருமணி..................................உகிரினை
(இ - ள்.) திருமணி திரை பாடு அவிந்த முந்நீர்
வரும் இரும்
சூல் மழை மூன்றும் புரையும் மாமெய் - அழகிய நீலமணி |