பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்54

     (பரிமே.) 43. இன்னும் அது கடவுட்கொடி என்பது தோன்ற அவன் என உயர்திணையாற் கூறினார். செய்யுளாகலிற் சுட்டுப்பெயர்
முற்கூறப்பட்டது.

வயிற்றின்மேல் உதரபந்தமாய் வலந்தது.

"படியை மடி யகத்திட்டான்" (நான்மணிக் - கடவுள்.) என்புழியும் வயிறு மடி எனப்பட்டது.
44. முடிமேலன - கண்ணிகள். 45. தலைமேலது - சூட்டு.

48. தாக்கிரை - எறிந்தெடுக்கும் இரை.

இதனால் கருடனுக்கு அறனுடைமையும் மறனுடைமையும் கூறப்பட்டன.

49 - 56: கடுநவை . . . . .. வடிவுவேறிலையே

     (இ - ள்.) கடுநவை அணங்குங் கடுப்பும் - மிகவும் துன்ப
முண்டாகும் படி வருத்தும் வெகுளியும், நல்கலும் - அருள் செய்தலும்,
கொடுமையும் - மனக்கோட்டமும், செம்மையும் - நடுவுநிலைமையும் ஆகிய இப்பண்புகளை, வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை - நிரலே மறப்பண்புடையா ரிடத்தும் அறப்பண்புடையாரிடத்தும் நீ உடையனாயிருக்கின்றாய், இல்வழி இலை - அவை இல்லாதாரிடத்து
நீயுமஇப் பண்புகள் இல்லாதவனா யிருக்கின்றனை, போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் - பெருமானே! நின்னைப் போற்றாதவருடைய
உயிரின் கண்ணும் போற்றுவாருடைய உயிரின்கண்ணும், மாற்று ஏம்
ஆற்றல் இலை - நிரலே அதனை மாற்றுதலும் காவல் செய்தலுமாகிய
செயல்களை நீ செய்தல் இல்லை, நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் - நினக்குப் பகைவரும் நண்பரும் என்னும் இரு திறத்தாரும்
இலராகலான்: எனும் வேற்றுமையின்று அது போற்றுநர்ப் பெறின் -
நினக்கு மாற்றாரும்கேளிரும் இலர் என்று கூறும் இதனோடு முன்னர் உள்வழியையுடையை இல்வழி யிலையே என்று கூறியதற்கும்
முரண்பாடில்லை. அங்ஙனம் கூறியதன் கருத்தை ஆராய்ந்து உணர்வாரைப் பெறுமிடத்து, நினக்குமனக்கோள் வடிவு - நினக்கு
அன்பர் மனத்திற்கொண்ட வடிவமே வடிவமாதலன்றி, நினக்கு என
வடிவு வேறு இலை - நீ நினக்கே உரியதாக வேறுவடிவும் உடையாய் அல்லை:

      (வி - ம்.) கடுப்பும் கொடுமையும் உடைய மறவோரிடத்தே நீ
அப்பண்புகளை உடையாய் போலக் காணப்படுகின்றனை, நல்கலும்
செம்மையும் உடைய அறவோரிடத்தே நீ அப் பண்புடையாய்போலக்
காணப்படுகின்றனை என்பது கருத்து.

கடுப்பு - வெகுளி. நல்கல் - அருளுதல். இல்வழி - இவ் விருவேறு
பண்புகளும் இல்லாதவரிடத்தே. போற்றார் - நின்னை வழி படாத