'அவரவர் ஏவலாளனும் நீயே' என்புழி
"என்னுட் கரந்துஎன் பின்வந் தருளி
என்னையும் தன்னையும் அறிவின் றியற்றி
என்னது யான்எனும் அகந்தையும் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு
எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு
என்வழி நின்றனன் எந்தை."
(இருபா இருபது, செய் - 18)