பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்60

   மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்
   ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
   காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
   சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள்
15 வேல னேத்தும் வெறியு முளவே
   அவை, வாயு மல்ல பொய்யு மல்ல
   நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற்
   சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை
   சிறப்பினுள் உயர்பாகலும்
20 பிறப்பினுள் இழிபாகலும்
   ஏனோர்நின் வலத்தினதே
   ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
   வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
   நாக நாணா மலைவில் லாக
25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
   மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
   பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
   உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
   அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
   விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
   விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
   தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
   எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
   கருட்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
   நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
   வசித்ததைக் கண்ட மாக மாதவர்
   மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
40 சாலார் தானே தரிக்கென அவரவி
   யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
   தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
   வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
   கடவுள் ஒருமீன் சாலினி யொழிய