45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
50 பெரும் பெயர் முருகநிற் பயந்த ஞான்றே
அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென
அறுவேறு துணியும் அறுவ ராகி
ஒருவனை வாழி ஓங்குவிறற் சேஎய்
55 ஆரா வுடம்பினீ அமர்ந்துவிளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய
அல்லலில் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்
60 திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்
திருங்கண வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்
ஆஅங், கவரும் பிறரும் அமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
65 பொறிவரிச் சாபமு மரனும் வாளும்
செறியிலை யீட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும்
வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு
மறுவில் துறக்கத் தமரர்செல் வன்றன்
70 பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய்
நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை
மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும்
சேரா வறத்துச் சீரி லோரும்
75 அழிதவப் படிவத் தயரி யோரும்
மறுபிறப் பில்லெனும் மடவோருஞ் சேரார்
நின்னிழல் அன்னோ ரல்ல தின்னோர்
சேர்வா ராதலின் யாஅம் இரப்பதை
|
|
|
|