விட்டெறிந்து: ஒருசொல் நீர்மைத்து,
விட்டெறிந்து என்னும்
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக்கிக் கொள்க. தீயழல்
- தீக்கொழுந்து. துவைப்ப - ஒலிக்கும்படி, நோய் செய்தலையுடைய
என்க. நுடங்கு - அசைகின்ற. சூர்மா - சூரபதுமனாகிய மாமரம். தடிந்து
- வெட்டி. மக்களுள் ஒருமையொடு பெயரிய - மக்கட்குரிய புண்ணிய
சனம் பாவ சனம் என்னும் இருவகையுள் ஒருவகையாகிய புண்ணிய
சனம் என்னும் பெயரையுடைய என்க. புண்ணிய சனம் - அவுணர்,
புண்ணிய சனம் என்பது வெறும் பெயர் மாத்திரையே என்பார்
'கொன்றுணல் அஞ்சாக் கொடுவினை மாய அவுணர்' என்றார்.
கொஃறகை - கொல் - தகை: கொல்லப்படும் தகுதியுடையார்.
தீயோர் ஆகலான் கொல்லப்படுதற்குரியார் என்றவாறு.
பிணிமுகமூர்ந்து கடலின்கண் பார் துகள்படப் புக்கு
முதல்
தடிந்து அவுணர் மருங்கு அமருழக்கித் தபுத்த வேலாலே வரை
உடைத்து ஆற்றுப்படுத்த கயந்தலை என இயைக்க.
நாவலந் தண் பொழில் - நாவலந்தீவு. குருகு - அன்றில்;
அதற்கு வடமொழியில் கிரௌஞ்சம் என்று பெயராகலின்
அப் பறவையின் பெயர் பெற்ற வரை என்றார் 'கிரௌஞ்சகிரி'
என்றவாறு ஆற்றுப்படுத்தல் மலையினூடே வழியுண்டாக்கி
அதன்வழிச் செலுத்துதல்.
(பரிமே.) கயந்தலை என்பது மென்மையுடைய தலை.
இது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
அது முருகனுக்குப் பெயராய் அண்மைவிளி ஏற்றுநின்றது.
11-15: மூவிரு கயந்தலை . . . . . . வெறியும் உளவே
(இ-ள்) மூஇரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்
- ஆறு மென்மையுடைய தலைகளுடனேயும் மத்தளம்போன்ற
பன்னிரண்டு தோள்களோடும், ஞாயிற்று ஏர் நிறத்தகை - ஞாயிற்று
மண்டிலத்தினது எழுச்சிக்கண் உண்டாகும் நிறம் போன்ற நிற
அழகுடனேயும், நளினத்துப் பிறவியை - சரவணப் பூம்பொய்கைக்கண்
தாமரைப்பூம் பாயலிலே தோன்றிய பிறப்பினை உடையாய், (எனவும்)
காஅய் கடவுள் சேய் - உலகத்தை அழிக்குந் தொழிலையுடைய
சிவபெருமானுடைய திருமகனே!, செவ்வேள் - செந்நிறமுடையவனே!.
சால்வ தலைவ என - சான்றாண்மை யுடையோனே தலைமைத் தன்மை
யுடையோனே என(வும்) கூறி, பேஎ விழவினுள் - நீ வெளிப்படுதலானே
கண்டார்க்கு அச்சந்தரும் வெறியாட்டு விழாக் களத்தின்கண், வேலன்
ஏத்தும் வெறியும் உள - நின்னை. வேன்மகன் புகழா நின்ற
வெறிப்பாடல்களும் உள்ளன;
(வி - ம்.) வேலன் வெறியாடும்பொழுது ஆறுமுகத்தோனே-
பன்னிரண்டு தோளோனே! தாமரைப்பூவிற் றோன்றியவனே!
சிவபெருமான் மகனே! சிவந்த நிறமுடையோனே! சான்றோனே!
தலைவனே! என்று கூறி ஏத்தும் வெறிப்பாடல்கள் உள்ளன என்க.
ஞாயிற்று ஏர் நிறத்தகை -ஞாயிற்றின் எழுச்சிக்கட்படும் நிறம் போன்ற
நிற அழகு என்க. நளினம் - தாமரைப் பூ. காய்தல்! |
|
|
|