நீயே வரம்பிற்று நின்னையே
வரம்பாக உடைத்து சிறப்பினுள் -
நல்வினையாலே; உயர்பு என்றது தேவராயும் சான்றோராயும் பிறக்கும்
உயர்ந்த பிறப்புக்களை; இழிபு என்றது விலங்காகவும் நரகராகவும்
பிறக்கும் இழிந்த பிறப்புக்களை. நல்வினையாலே என்றமையால்,
தீவினையாலே இழிபாகலும் என வருவித்துக் கூறுக.
முருகப்பெருமானின் தோற்றம்
22 - 35: ஆதிஅந்தணன்.......................................மருள
(இ - ள்) ஆதி அந்தணன் பரி அறிந்து கொளுவ - பிரமதேவன்
செலவினை அறியுமுறையானே அறிந்து செலுத்தா நிற்ப, வேதம் மா பூண்
வையத் தேர் ஊர்ந்து - வேதங்களாகிய குதிரை பூட்டப்பட்ட பூமியாகிய
தேரில் ஏறிச்சென்று, மூவகை ஆர் எயில் - வெள்ளியும் பொன்னும்
இரும்புமாகிய மூவகை உலோகங்களாலாகிய வெல்லுதற்கரிய முப்புரம்
என்னும் மதில்கள், மலை வில் ஆக - இமயமலையையே
வில்லாகக்கொண்டு, நாகம் நாண் ஆக - வாசுகி என்னும் பாம்பை
அவ் வில்லிற்கு நாணாகக்கொண்டு, ஓர் அழல் அம்பின்
- ஒப்பற்றதொரு தீக்கணையை, முளிய மாதிரம் அழல எய்து
- வேகும்படியும் திசைகள் வெதும்பும்படியும் எய்து அழித்து, அமரர்
வேள்விப் பாகம் உண்ட - தக்கன் தேவர்க்குச் செய்த வேள்விக்கண்
அவியுணவை உண்ட, பைங்கண் பார்ப்பான் - பசிய கண்ணையுடைய
சிவபெருமான், உமையொடு புணர்ந்த காம வதுவையுள் - மலையரையன்
மகளாராகிய இறைவியோடு புணர்ந்த காமநுகர்ச்சிக்குக் காரணமான
திருமணத்தின்கண், அமையாப் புணர்ச்சி அமைய - அமையாத
புணர்ச்சியினை ஒருநாளின்கண் தவிர்ந்தானாக, நெற்றி இமையாநாட்டத்து
ஒரு வரங்கொண்டு - நெற்றியினிடத்தே இமைத்தலில்லாத நெருப்புக்
கண்ணையுடைய அச்சிவபெருமானிடத்தே இந்திரன் சென்று ஒரு வரம்
வேண்டிப் பெற்று, விலங்கு என - நினது புணர்ச்சியாலமைந்த கருவினை
அழிப்பாயாக என்று கூற, எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டவன்
- தீப்பறக்கச் சினந்து என்றும் அழிதலில்லாத மழுப்படையினை ஏந்திய
அச் சிவபெருமான், வாய்மையன் ஆதலின் - வாய்மையிற் றவிராது
அதனைப் பேணுபவனாதலான், வேள்வி விண்ணோர் முதல்வன் விரிகதிர்
மணிப்பூணவற்கு - நூறு வேள்விகளைச் செய்து தேவர்க்குத் தலைவனானவனும்
விரிந்த சுடரையுடைய மணிகளானாகிய அணிகலன்களையுடையவனுமாகிய
அவ் விந்திரனுக்கு, தான் ஈத்தது அரிது என மாற்றான் - தான் கொடுத்த
வரம் செய்தற்கரியதென்று கருதி அதனை மறாதவனாய், உலகேழும்
மருள - இவ் வுலகங்கள் ஏழும் தனதுவாய்மையிற்றப்பாத செயலைக்
கண்டு வியவா |