நிற்கும்படி, உருவு திரித்து இட்டோன்
- உருவாய்த் திரண்ட
அக் கருவினைப் பல கண்டமாகச் சிதைத்து அவ் விந்திரன்
பாற் கொடுத்தருளினான்;
(வி - ம்.) ஆதியந்தணன்: பிரமதேவர். பரி - செலவு.
பரியறிந்து கொளுவ என மாறுக. செலவினை அறியுமாற்றான் அறிந்து
செலுத்த என்க. வேதமா: பண்புத்தொகை. வையத்தேர்: பண்புத்தொகை.
நாகம் - பாம்பு; வாசுகி. மலை - இமயமலை. மூவகை எயில் - வெள்ளி
பொன் இரும்பு என்னும் மூவகை உலோகங்களாலே தனித்தனி இயன்ற
மதில்கள்; என்றது முப்புரத்தை. எய்த பார்ப்பான் - உண்ட பார்ப்பான்
எனத் தனித்தனி கூட்டுக. பார்ப்பான். ஈண்டுச் சிவபெருமான்.
"ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ. ஒருகணை கொண்டு
மூவெயில் உடற்றி," (புறநா. 55: 1 -2) என்றார் பிறரும். அழல எய்து,
முளிய எய்து எனத் தனித்தனி கூட்டுக. உமை - இறைவி. காம
வதுவை - காம நுகர்ச்சிக்குக் காரணமான மணம். அமையாப் புணர்ச்சி
- விடுதற்கரிய புணர்ச்சி என்க. வதுவையுள் அமையாப் புணர்ச்சி,
ஒருகால் அமைய என்க. நெற்றி இமையா நாட்டம்: அன்மொழித்தொகை;
சிவன். வேள்வி விண்ணோர் முதல்வன் ஆகிய மணிப்பூணவற்கு எனக்
கூட்டுக. நூறு வேள்வி செய்தமையாலே விண்ணோர்க்கு
முதல்வனாகியவனும் என்க. எரிகனன்று அத்தொழிலில் என்றும்
ஆனாக் குடாரி என்க. குடாரி - மழுப்படை. குடாரி கொண்டவன்
- சிவன். திரித்திட்டோன் என்புழி ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்து நின்றது.
இப் பகுதியில் கொண்டுகூட்டுப் பொருள் மலிந்திருத்தல்
உணர்க.
இனி, இப் பரிபாடற் பகுதிபற்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர்
தமது திருமுருகாற்றுப்படை 58, 255 அடிகளின் விரிவுரைக்கட்
கூறியுள்ளனவும் ஈண்டு உணரற்பாலன; அவையாவன: -
"இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே இந்திரன்
சென்று நீ புணர்ச்சி தவிரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அவனும்
அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை
இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடிகள் உணர்ந்து அவன்
பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே இறைவன்
கூறாகிய முத்தீக்கட் பெய்து. அதனைத் தம் மனைவியர் கையிற்
கொடுப்ப, அருந்ததி ஒழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச்
சூன்முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பயந்தாராக,
ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகளுக்குக்
கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய
அவ் வாறுவடிவு மொன்றாய் அவனுடனே பொருது அவனைக்
கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ் வடிவம் ஆறாகி
வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்ற தென்று புராணங் கூறிற்று.
இதனைப் 'பாயிரும் பனிக்கடல்' என்னும் பரிபாடற் பாட்டானும் உணர்க
எனவும்,
"அங்ஙனம் அங்கியின்கண் இட்டுச் சத்தி குறைந்த
கருப்பத்தை
முனிவர் எழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததி |
|
|
|