(வி - ம்.) ஆ அங்கு - அங்ஙனமாக. பிறர் - அவரல்லாத பிற
தேவர்கள். அமர்ந்து - விரும்பி. மஞ்ஞை - மயில். சாபம் - வில். மரன்
- மரம்; தோமரப்படை என்க. கனலி - மழு குடாரி - கோடரி. கையினும்
எனற்பால முற்றும்மை விகாரத்தால் தொக்கது. கொட்டை -தாமரைப்
பொருட்டு. தாமரைப் பொகுட்டின்கண் இருக்கும் அவ் விளங்குழவிப்
பருவத்திலேயே புகழ் வரம்பிகந்தோய் என்க.
71 - 78: நின்குணம்......................................சேர்வராதலின்
(இ - ள்.) நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோரும்
அல்லதை - நினது திருவருளினை விரும்பி ஏற்றுக் கொண்டு நினது
நெறியாகிய அறநெறிக்கட்செல்லுதலைக் கடைப் பிடியாகக்
கொண்டொழுகுவாரும் அல்லது, மன்குணம் உடையோர் மாதவர்
வணங்கியோர் அல்லதை - நினது திருவருள் வெள்ளத்தே நிலைத்து
நிற்கும். குணமுடையோராய்ப் பெரிய தவத்தினையுடையோரும். வணங்கத்
தகுந்தோராகிய சீவன்முத்தரும் அல்லது, செறுதீ நெஞ்சத்துச் சினம்
நீடினோரும் - பிறவுயிரைக் கொல்லும் தீய நெஞ்சத்தோடே வெகுளியும்
உடையோரும், அறத்துச் சேராச் சீரில்லோரும் - அறநெறிக்கட் சேராத
புகழில்லாத பூரியரும், அழிதவப் படிவத்து அயரியோரும்
- கூடாவொழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தையுடையோரும், மறுபிறப்பு
இல் என்னும் மடவோரும் - இப் பிறப்பின் நுகர்ச்சியே உள்ளது
மறுபிறப்பும் அறம் பாவம் வீடு கடவுள் என்பன பொய்ப்பொருளாம்
என்னும் அறிவில்லாதாரும், நின்னிழல் சேரார் - நினது திருவடி நீழலை
எய்தாதவர் ஆவர், அன்னோர் அல்லது - சினம் நீடினோர் முதலிய
அத்தன்மையுடையோரல்லது, இன்னோர் - நின் குணம்
எதிர்கொண்டோர் முதலிய இத் தன்மையுடையோர், சேர்வர் ஆதலின்
- நினது திருவடி நீழலை எய்துவாராதல் ஒருதலையாதலின்;
(வி - ம்.) அறங்கொண்டோரும் மாதவர் வணங்கியோரும்
நின்னிழல் சேர்வர் அல்லது, சின நீடினோரும் சீர் இல்லோரும்
அயரியோரும் நின்னிழல் சேரார்; இத்தன்மையோர் சேரார் முற்கூறிய
அறங்கொண்டோர் அன்னோர் நின்னிழல் சேர்வராகலின் என இயைபு
காண்க.
நின்குணம் என்றது நினது குணமாகிய திருவருளை என்றவாறு.
அதனை எதிர்கொள்ளுதலாவது எல்லாம் இறைசெயல் என அறிந்து
யான் எனது என்னும் செருக்கற்றிருத்தல். இதனை,
"யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதுயான் என்னும்
இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்
|
|
|
|