105 - 6: இவற்றை எல்லாம் அறிந்து ஊடிய தலைமகள் பால்
தலைவன் விறலியைத் தூதுவிட்டான். அவ் விறலிக்குத் தலைவி
தலைவனுடைய பரத்தமையை எடுத்துக் கூறிப் பின் வையையை நோக்கி,
'வையாய்! நின்கண் ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்த காமம் எப்பொழுதும்
குறையாதொழிக' என வாழ்த்து முகத்தானே வாயில் மறுத்தாள்.
நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்
பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
நிலமறை வதுபோன் மலிர்புன றலைத்தலைஇ
மலைய வினங்கலங்க மலைய மயிலகவ
5 மலைமாசு கழியக் கதழுமருவி யிழியும்
மலிநீ ரதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்
10 தாயிற்றே தண்ணம் புனல்;
புகைபூ அவியா ராதனை யழல்பல வேந்தி
நகையமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும் வையை வரவு:
தொடிதோள் செறிப்பத் தோள்வளை யியங்கக்
15 கொடிசே ராத்திருக் கோவை காழ்கொளத்
தொகுகதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக
உகிருங் கொடிறு முண்டசெம் பஞ்சியும்
நகிலணி யளறு நனிவண்டன் மண்ட
இலையு மயிரு மீர்ஞ்சாந்து நிழத்த
20 முலையு மார்பு முயங்கணி மயங்க
விருப்பொன்று பட்டவ ருளநிறை யுடைத்தென
வரைச்சிறை யுடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை யுடைத்தன்று கரைச்சிறை யறைகெனும்.
உரைச்சிறைப் பறையெழ வூரொலித் தன்று
25 அன்று, போரணி யணி்யிற் புகர்முகஞ் சிறந்தென
நீரணி யணியி னிரைநிரை பிடிசெல
ஏரணி யணியி னிளைஞரு மினியரும்
ஈரணி யணியி னிகன்மிக நவின்று
|
|
|
|