துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி
கன்றிடிற் காமம் கெடூஉ மகளிவன்
அல்லா நெஞ்ச முறப்பூட்டக் காய்ந்தே
100 வல்லிரு ணீய லதுபிழை யாகுமென
இல்லவ ராட விரந்து பரந்துழந்து
வல்லவ ரூட லுணர்த்தர நல்லாய்
களிப்பர் குளிப்பர் காமங் கொடிவிட
அளிப்ப துனிப்ப வாங்காங் காடுப
105 ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு.
என்பது, வையைநீர் விழவணியிற் காதற்பரத்தை, இற்பரத்தையுடன்
நீராடினான் தலைமகனெனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப்
புணர்ந்தானெனக் கேட்ட தலைமகள் வாயிலாகப் புக்க விறலிக்கு
அவ் வையைநீர் விழவணியும் ஆங்குப்பட்ட செய்தியும் கூறி வாயின்
மறுத்தது.
1ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை;
பண்ணுப் பாலையாழ்
உரை
1 - 10: நிறைகடல் . . . . . . . புனல்
(இ - ள்.) வானம் நிறைகடல் முகந்து உராய் - முகில்கள் நீர் நிறைந்த
கடலின்கண் உள்ள நீரை முகந்துகொண்டு வானத்தின்கண் யாண்டும்
பரவி, நீர் நிறைந்து துளும்பும் தம் பொறை தவிர்பு அதைவிட - நீர்
நிறைதலாலே துளும்பாநின்ற தமது பாரம் தீர்ந்து இளைப்பாறுதற்
பொருட்டுப் பெய்யுவன போல, பொழிந்தன்று - மழையைப்
பொழியாநின்றன, மலிர் புனல் நிலம் மறைவதுபோல் தலைத்தலைஇ
- அதனால் மிக்க நீர் ஊழிக்காலத்தே நிலத்தை மறைக்கப் பெருகுமாறு
பெருகி இடந்தோறும் கூடி, மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ
- மலையிடத்தே வாழும் மானினம் முதலிய உயிர்கள் கலங்கும் படியும்
மலையிடத்தனவாகிய மயில்கள் களித்து அகவாநிற்பவும், மலை மாசு
கழியக் கதவும் அருவி இழியும் - மலைகளின்மேற் படிந்துள்ள அழுக்குகள் தீரும்படி விரையும்
அருவியாய் வீழ்கின்ற, மலிநீர்
- வெள்ளம், அதர்பல கெழுவு தாழ்வரை -
1. (பாடம்) ஆசிரியர் நல்லந்துவனார். |