ஓடுதற்குரிய வழிகள்
பற்பல பொருந்திய மலைச்சாரலிலே, தண்
அம்புனல் - குளிர்ந்த அழகிய அந் நீர், மாசு இல் பனுவல் புலவர்
புகழ் புல நாவில் புனைந்த நன்கவிதை மாறாமை - குற்றமில்லாத
நூற்கேள்வியினை யுடைய நல்லிசைப் புலவர்கள் புகழப்படும்
அறிவினையுடைய தம் நாவாலே பாடிய நல்ல செய்யுள்கள்
பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய, மேவிப் பரந்து விரைந்து வினை
நந்தத் தாயிற்று - யாண்டும் சென்று பரவி விரைந்து உழவு முதலிய
தொழில்கள் பெருகும்படி தாவிச் செல்லா நின்றது;
(வி - ம்.) முகில்கள் கடல் முகந்து தம் பாரந்
தீரும்படி
மழையைப் பொழிந்தன; வெள்ளம் ஊழிக்காலத்தே நிலத்தை மறைக்கப்
பெருகுமாறு போலே பெருகிற்று. அப் புனல் அருவியாய்க் கலங்கவும்
அகவவும் மாசு ஒழியும்படி அதர் பொருந்திய தாழ்வரையிலே புலவர்
கவிதை மாறாமல் மேவிப் பரந்து வினைகள் பெருகும்படி தாவிச்
சென்றது என முடிவு காண்க.
நிறைகடல்: வினைத்தொகை. உராய் - பரந்து. பொழிந்தன்று
-பொழிந்தது; பன்மை ஒரு மை மயக்கம். பொறை பாரம். அசைவிட
-இளைப்பாற. வானம் - முகில்: ஆகுபெயர். மறைவது - மறைப்பது.
மலிர்புனல் - மிக்க நீர் வெள்ளம். இனம் - மானினம் முதலியன. மலைய
- மலையிடத்துள்ளனவாகிய கதழும் - விரையும். பனுவல் - நூல். புல
நா அறிவாற் சிறந்த நா. நன் கவிதை - குற்றமில்லாத அழகிய செய்யுள்.
அவையாவன:- "சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி இரு நிலம்,
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையை..." "வையை என்ற பொய்யாக்
குலக்கொடி" "புகழ்பூத்த லல்லது, பொய்யாத லுண்டோ மதுரை
புனைதேரான், வையையுண் டாகும் அளவு" என்றின்னோரன்ன
செய்யுள்கள் என்க. தாயிற்று - தாவியோடிற்று. வினை - தொழில்.
நந்துதல் - பெருகுதல்.
(பரிமே.) 4. இனம், மானினம் முதலாயின.
8. கவிதை - கவியது தன்மை. அஃது ஈண்டுச் செய்யுண்மேல்
நின்றது.
11 - 13: புகைபூ . . . . . . . . . வையை வரவு
(இ-ள்.) வையை வரவு - அவ் வெள்ளம் வையையாற்றின்கண்
வந்த வருகையின்கண், புகை பூ ஆராதனை அவி அழல் பல ஏந்தி
- புதுப்பன லாடற்கு விழைந்த மகளிர் தம் கூந்தல் புலர்த்துவதற்கு
வேண்டிய அகில்மரம் முதலிய புகைக்கப்படும் பொருளும் சூடுதற்குரிய
மலர்களும் வையைக்கு ஆராதனைக்குரிய அவிப்பொருளும் நெருப்பும்
ஆகியவற்றையும் பொன்மீன் பொன்னண்டு முதலிய பிற பற்பல
பொருள்களையும் ஏந்திக் கொண்டு, நகை அமர் காதலரை - தம்
மகிழ்ச்சி பொருந்திய தத்தங் கணவன்மாரை, நாள் அணி கூட்டும்
- திருநாளுக்குரிய
ப--6 |
|
|
|