பக்கம் எண் :

பரிபாடல்- வையை82

அணிகலன் ஆடைகளை அணியச்செய்யும், வகை சாலும் - முறை
மிகாநின்றது;

      (வி-ம்.) வையையின்கண் வெள்ளம் வந்தவிடத்தே மகளிர் புகை
முதலிய ஏந்தித் தங் காதலரை அணிக்கூட்டும் முறை மிகா நின்றது
என்க.

      தகுதியால் மகளிர் என்னும் வினைமுதல் வருவித்துரைக்கப்பட்டது.
புகை - அகில் சந்தனம் முதலியன; ஆகுபெயர். அவியாகிய
ஆராதனைப் பொருள் என்க. ஆராதனை; ஆகுபெயர். பல என்றது,
பொன்மீன், பொன்னண்டு முதலிய பிற பலவும் என்க.

      நாளணி - திருவிழாக் காலங்களில் சிறப்பாக அணிந்துகொள்ளும்
ஆடை அணிகலன்கள். வகை - முறை சாலும் - மிகாநிற்கும். இனி
அப்பொழுது உண்டான ஆரவாரங்களை மேலே கூறுகின்றார்.

14 - 24: தொடி . . . . . . . . . ஊர் ஒலித்தன்று

      (இ - ள்.) தொடி தோள் செறிப்ப - மகளிர்கள் மகிழ்ச்சி யானே
உடல் பூரித்தலானே தொடிகள் தோளில் அழுந்த, தோள் வளை இயங்க
- தோளின்கண் இட்ட வளையம் முன்கை இடத்தே வந்து அலையாநிற்ப,
கொடி சேரா - எழுதப்பட்ட தொய்யிற்கொடிகள் ஒன்றோடொன்று கலந்து
அழிய, கோவை காழ்கொள - மேகலை வடங்கள் அற்று உதிர்ந்து
நூல்தோன்றா நிற்ப, தொகு கதிர்முத்துத் தொடை கலிழ்பு மழுக
- திரண்ட ஒளியினையுடைய முத்துமாலை கலங்கிச் சந்தனம் முதலியன
பூசப்பட்டமையானே ஒளி மழுங்காநிற்ப, உகிரும் கொடிறும் உண்ட
செம்பஞ்சியும் - நகத்தினும் கபோலத்தினும் ஊட்டப்பட்ட அலத்தகச்
சேறு அழிய, நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட - முலைக்கு
அணிந்த குங்குமக் குழம்பு வண்டலிட்டு ஓடா நிற்ப, இலையும் மயிரும்
ஈரஞ் சாந்து நிழத்த - தளிராற் செய்த படலைமாலையும் கூந்தலும்
குளிர்ந்த சந்தனத்தை அழிக்க, முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க
- மகளிர் முலையிடத்தும் மைந்தர் மார்பிடத்தும் பொருந்திய இருபாலார்
அணிகலன்களும் தம்முள் கூடாநிற்ப, அவர் விருப்பு ஒன்று பட்டு உளம்
நிறை உடைத்தென - மகளிரும் மைந்தருமாகிய அவ்விருபாலார் உளமும்
அன்பாலே ஒன்றுபட்டு அவர்தம் நிறையுடைமையை
உடைத்தாற்போலவே, வையை வரைச் சிறை உடைத்தது - வையை
வெள்ளம் மலைபோன்ற அணைகளை உடைத்தொழித்தது, வையைச்
சிறைத் திரை - அவ் வையை யாற்றின் சிறகுகளாகிய அலைகளோ,
கரைசிறை உடைத்தன்று - வையை யாற்றினது கரையாகிய காவலை
உடைத்தொழித்தன, உரைச் சிறை- அக்கரை அடைத்தற்கு ஆளெழுக
என்று கூறும் கரை காவலருடைய சொல்லாகிய காவல் ஒலியோடே,
பறையெழ ஊர்