தகுந்த ஈர அணிகளுடனே; கைம்மான்
எருத்தர் - யானையின் பிடரின்
மிசையாருமாய், கலிமட மாவினர் - கலித்த மெல்லிய நடையினையுடைய,
குதிரையின் மிசையாருமாய், இகல் மிக நவின்று - விளையாட்டுப்
போரினைப் பெரிதும் விரும்பி, தணி புனல் ஆடும் தகைமிகு - தண்ணிய
நீராட்டுவிழவிற்குரிய தகுதி மிக்க, துணிபுனல் போர்க்கண் ஆக -
தெளிந்த வையை நீரே அவ் விளையாட்டுப் போரினை நிகழ்வதற்கேற்ற
போர்க்களமாகக் குறித்து, துறை வேண்டும் மைந்தின் - ஏற்ற
துறையினைத் தேர்ந்து கொள்ளும் விருப்பத்துடனே ஒருவரின் ஒருவர்
முற்பட்டு, அணி அணியாகிய தாரர் கருவியர் - கூட்டங் கூட்டமாகிய
தூசிப்படையின் தன்மையினையுடையராய் அப் போர்க்கு வேண்டும்
படைக்கலங்களை உடையராய், நெய்ம்மாண் சிவிறியர் - உள்ளிடப்பட்ட
புழுகுநெய்யாலே மாட்சிமைப்பட்ட துருத்தியினை உடையராய், நீர் மணக்
கோட்டினர் - உள்ளிடப்பட்ட பனிநீராலே மணமிக்க கொம்புகளை
உடையராய், வெண் கிடை மிதவையர் - வெள்ளிய நெட்டிகளானே
செய்யப்பட்ட தெப்பங்களை உடையராய், நன்கிடைத் தேரினர்-நிற
மூட்டப்பட்ட நல்ல நெட்டிகளாலே செய்யப்பட்ட தேர்களை உடையராய்,
தண்டா உண்டிகை - செலவு தவிராத யானைத்திரளும் குதிரைத்திரளும்,
சாரிகை மறுத்து - தத்தம் கதியிற் செல்லுதலை ஒழிந்து, ஓர் இயவு
உறுத்தர - அந்த ஒரே வழியின்கட் செல்வாரை நெருக்கும்படியாக, ஊர்பு
ஊர்பு இடந்திரீஇ - செலுத்திச் செலுத்தி இடங்கள்தோறும் திரிதலானும்:
(வி-ம்.) அன்று என்றது - அங்ஙனம் வையையில்
வெள்ளம்
பெருகி ஊர் ஆரவாரித்த அந்த நாளிலே என்றவாறு. போரின்கண்
களிற்று யானைகளைச் சிறப்பாகக் கருதி அணிசெய்து செலுத்துமாறு
போல நீராட்டிற்குப் பிடியானைகள் சிறப்புடையனவாகக் கருதி அணிந்து
செலுத்தப் பட்டன என்பது கருத்து.
இளையரும் இனியரும் என்றது, இளமையுடைய ஆடவரும்
அவர்க் கினியராகிய மகளிரும் என்றவாறு. 'இனியரும் அடுபுனல் செல
அவற்றை இழிவர்' எனக் கூட்டுக.
ஈரஅணி என்றது நீராடற்கேற்ற அணி என்றவாறு:
அகரம்
கெட்டு ஈரணி என நின்றது. இகல் - விளையாட்டுப் போர். நவின்று
- விரும்பி. தணி - தண்மையுடைய. துணி - தெளிவு. துணிபுனல்
போர்க்கண் ஆக என மாறுக. கண் - இடம். போர்க்கண் - போர்க்களம்.
மைந்து - விருப்பம். மைந்தினால் திரிய என இயைக்க. தாரர் -
தார்ப்படையின் தன்மையுடை யராய் என்க. முந்திச் செல்லும்
விருப்பமுடையராய் என்றவாறு. கருவி - அவ்விளையாட்டுப் போர்க்கு
வேண்டிய படைக்கலம் என்க. கைம்மான் யானை. கலிமடமா -
கலிப்பையும் மென்னடையையும் உள்ள குதிரை என்க. எருத்து - பிடரி.
நெய் - புழுகுநெய். சிவிறி - நீர் தூவும் குழல்; துருத்தி. நீர் - பனிநீர்.
கோடு - விலங்குகளின் கொம்பு. அதனகத்தே பனிநீர்
|
|
|
|