பக்கம் எண் :

பரிபாடல்- வையை85

விட்டு அடைத்து அதுகொண்டு விளையாடுவர் என்க. கிடை - நெட்டி.
நிறமூட்டப்பட்ட நெட்டியென்பார் 'நன்கிடை' என்றார். தண்டா - தவிராத.
சாரிகை - யானை குதிரைகளின் செலவுவகை. உண்டிகை - திரள். ஓரியவு
எனற்பாலது ஓரிய என ஈறுகெட்டு நின்றது; ஒருவழி என்க. உறுத்தர -
நெருக்க. திரிய என்னும் செயவெனெச்சம். திரீஇ எனத் திரிந்து நின்றது.

      பிடி செல்லுதலானும் இளையரும் இனியரும் திரிதலானும் என
ஏதுப்பொருளாக்குக. இவ் வேதுக்களான் நிகழும் நிகழ்ச்சி மேலே கூறுவர்.

      (பரிமே.) 30. மைந்துடனே, 37. திரிதலானும் என இயையும்.

      31. தூசித்தன்மை - முன்செல்லுதல்.

      36. உண்டை என்பது "கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன்"
(இறைய- 2. மேற் -5) என்புழிப் போலத் திரள் மேலதா 'உண்டிகை'
எனத் திரிந்து நின்றது.

38 - 45: சேரி . . . . . . . . . . . மருண்டு

      (இ - ள்.) சேரி இளையர் செலவு அரு நிலையர் - புறச்சேரியில்
இளையர் செல்லுதற்கரிய நிலைமையினராக, வலியோர் அல்லார் துறை
துறை அயர - மெலியோர் உள்ளே புகுதமாட்டாமையாலே துறையைத்
துறையை விரும்பாநிற்ப, மெலியர் அல்லார் விருந்து புனல் அயர -
வலியவர் புது நீரின்கட் புகுந்து ஆடுதலானே, சாறும் சேறும் நெய்யும்
மலரும் நாறுபு - பத்துத் துவர் முதலாயின ஊறின நீரும் சந்தன
முதலியவற்றின் குழம்பும் நறுமண எண்ணெயும் சூடிய பூக்களும்
மணக்கும்படி, யாறு வரலாறு நிகழும் - இவ் வையையாறு வருகின்றவாறு
நிகழா நிற்கும், புலம்புரி அந்தணர் நாறுபு நிகழும் யாறுகண்டு -
வேதத்தை விரும்பும் அந்தணர்கள் இவ்வாறு பல்வேறு மணங்கமழ
ஒழுகாநின்ற யாற்றின் தன்மையை உணர்ந்து, விரை மண்ணுக் கலிழை
வேறுபடு புனல் என - மகளிரும் மைந்தரும் பூசின மணப்பொருள்களைக்
கழுவின அக் கலங்கல் நீரை இது தூய்மையிழந்து மாறுபட்ட தென
எண்ணி, மருண்டு கலங்கினர் - மருட்சியடைந்து நீராடுதலும்
வாய்பூசுதலும் செய்யாதாராய்க் கலக்கமெய்தினர்;

      (வி-ம்.) சேரி - புறஞ்சேரி: புறஞ்சேரியின்கட் காதலாற் செல்லும்
இளையர் என்க. அருநிலையர் - அரிய நிலைமையினர். வலியோர்
அல்லார் - அக் கூட்டத்துட் புகுந்து செல்லுதற்குரிய ஆற்றல்
இல்லாதவர் என்க; மெலியோர் என்றவாறு. துறைதுறை - துறையைத்
துறையை. அபர -விரும்ப: கூட்டத்துட் புகும் ஆற்றல் உடையார்
என்பார் 'மெலியோ ரல்லார்' என்றார். விருந்துபுனல் - புதுநீர். சாறு
- மணநீர். துவரிலும் விரையிலும் ஊறிய நீர். அஃதாவது:-
பத்துவகைப்பட்ட துவரினும்