பக்கம் எண் :

பரிபாடல்- வையை88

      (வி-ம்.) வரை - எல்லை. வான் - வெள்ளிய. 'வாலருவிபா
தாலாட்ட' என்றும் பாடம். இதனைக் கொண்டு அருவி யிசையாகிய
பாட்டுத் தாலாட்டாநிற்ப எனினுமாம். கரை - தடை. அருவி -
உருவமற்றது. கால் - காற்று. இரவில் - இரவுக்குறிக்கண். முலையிடை
எனற்பாலது. இடைமுலை என முன்பின்னாக மாறிநின்றது. அல்கல் -
கிடத்தல். புரைவது - பொருந்துவது. அல்கலுக்குக் குன்று புரைவதாம்
என்க. பூந்தாரான்-முருகப் பெருமான். குன்று - திருப்பரங்குன்று. கூடார்
- ஆண்டுச் செல்லாதார் உரை - உரைத்தற் றொழில். உராய் - பரவி.
சலப்படையான் - மதவேள். சலம்: வஞ்சனை - புலப்பட யாவர்க்கும்
தோன்றும்படி, தெருவின்கட் கிடக்கும் மாலை முதலியவற்றை வரன்றிக்
கொணருமாற்றால் சலப் படையான் அவ் விர விற்றாக்கியதெல்லாம்
யாவர்க்கும் புலப்பட என விரித்தோதுக புன்னம் யுலரி - புற்கென்ற
வைகறை. அம்: சாரியை. நிலப்பட - வறுநிலமாக. மலர்ந்தது
- பரவி விரிந்தது.


     "நிறைகடன் முகந்துராய் என்பது முதல்...............தமிழ்வையைத்
தண்ணம்புனல்" என்பது முடிய ஒரு தலைவன் வையையின் புது
நீரின்கண் இற்பரத்தையுடன் நீராடியுவன் தன் காதற்பரத்தையின்பால்
தழையைக் கையுறையாகக் காட்டிக் கூறுவானது கூற்றாகக் கருதுக.

     இங்ஙனம் கூறுபவன் "வையைப் புதுப்புனல் நகையமர்காதலரை
நாளணி கூட்டும் வகைசாலும்" எனவும், "விருப்பொன்று பட்டவர்
உளநிறையுடைத்து" எனவும், 'ஏரணி அணிந்து இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகன்மிக நவின்று' எனவும், "இரவிற் புணர்ந்தோர்
இடைமுலையல்கல் புரைவது பூந்தாரான் குன்று" எனவும் அவன்
கூறியவற்றை இவன் பிற மகளிரொடும் இங்ஙன மெல்லாம் நீராடிவந்து
கூறினான் என எண்ணிக் காதற்பரத்தை புலந்து பின்வருமாறு
கூறுகின்றாள் என்க.

     (பரிமே.) (இதுகாறும்) இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன்
காதற்பரத்தைக்குக் கூறியது. 56. சொல்லுதற் றொழிலோடும் இழிந்து
போந்து மதுரையில் தெருவின்கண் ஓடி வஞ்சனை செய்யும் படையான்
இரவிற் செய்ததெல்லாம் ஊர்காப்பார்க்குப் புலப்பட நின்று.

61 - 70: விளியா . . . . . . . வையைவரவு

     (இ - ள்.) விளியா விருந்து-அழைக்கப்படாத விருந்தினனாகச்
செல்லும் நீ, விழுவார்க்குக் கொய்தோய் தளிர் - நின்னை விரும்பும் பிற
மகளிர்க்கே இத் தளிரைக் கொய்தனை (எனக்குக் கொய்தாயல்லை எனக்
காதற்பரத்தை கூற), தாம் அறிந்தாய் இவை - அதுகேட்ட தலைவன் நீ
நன்கு அறிந்து கொண்டாய் இவைதாம் பிறமகளிர்க்குக் கொய்தவையே
ஆகும் உண்மையே' என்றான், பணிபு ஒசி (அசி?) பண்ப - அதுகேட்ட
காதற்பரத்தை பணிமொழி கூறாநிற்பாயேனும் முறிந்த அன்பினை
உடையோனே, இனி களவு எய்தும் இச் செயலானே இப்பொழுது நினது
களவொழுக்கம் எனக்குப் புலப்படா