நின்றது, பண்டு எல்லாம் - முன்னர்
நீ எனக்குக் கொய்து கொணர்ந்த
போதெல்லாம் விரைவில் வருதலால் தளிர் உருவம் துவள்வதில்லையே;
நனி உருவத் துவள் கண்டீ என்னோ - இத்தளிர் மிக உருவந்
துவண்டிருத்தலைப் பார் இதற்குக் காரணம் நீ இது பிறள் ஒருத்திக்குக்
கொய்து சென்று அவளால் மறுக்கப்பட்டமையால் காலம் நீட்டித்தலேயாம்
அஃதன்றி வேறு என்னாம் கூறுக. நின் மார்பில் தார்வாடக் கொய்ததும்
வாயாளோ - இனி அப் புதியவள்தான் நினது மார்பின்கண் அணிந்த
மாலை வாடும்படி நெடிது நின்று இத் தளிரைக் கொய்ததற்கேனும் நினக்கு
நேர்ந்திலளோ, கொய்தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ - இங்ஙனம்
கொய்யப்பட்ட இத்தழையைக் கையுறையாகக்கொண்டு சென்று நீ
அவளடியில் வீழ்ந்து தாழ்ந்திருப்பாயே அத் தாழ்ச்சி கருதியேனும்
அவள் நினக்கு நோந்திலளோ!, செப்பு - ஏனோ விழிக்கிறாய் சொல்
என்றாளாக, வையை வரவு காமர்ப் பெருக்கு அன்றோ - அது கேட்ட
தலைவன் வையையின்கட் புதுப்புனல் வருகை அழகிய
பெருக்குடைத்தன்றோ அதனால், புனை புணை ஏறத் தாழ்த்தது -
கைசெய்யப்பட்ட புனையின்கண் ஏறி அதனைக் கடத்தற்குப் பொழுது
தாழ்த்தது ஆதலானே, நீரில் துவண்டது - அவ்வையைநீர் காரணமாக
இவை துவண்டன, சேஎய் குன்றம் - யான் முருகப் பெருமானுடைய
திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணையாக இது கூறுகின்றேன் என்றான்.
(வி-ம்.) விளியா விருந்து - அழைக்கப்படாத விருந்தினன்.
தலைவன் மற்றொருத்தியாலே அழைக்கப்படாது வலிந்து தானே
போயினன் என்பது தோன்ற 'விளியா விருந்தாகிய நீ' என்றாள்.
விழுவோர் அங்ஙனம் நீ வலிந்து சென்றுழி நின்னை விரும்புவோர்
என்றவாறு. செறல் பற்றிப் பன்மை கூறினள். பின்னர் வாயாளோ என
ஒருமையாற் கூறுதல் உணர்க.
எனக்குக் கொய்தாயல்லை என்பது குறிப்பெச்சம்.
இவைதாம்
அறிந்தாய் என்றது, குறிப்புமொழி நீ அறிந்திலை என்னும் பொருளது.
பணிபும் எனற்பால உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
பணிகின்றாயே தவிர அன்பில்லாதாய் என்பது கருத்து. பரிமேலழகர்
பணி பொசி பண்ப' எனப் பாடங்கொண்டனர் என்பது அவருரையானே
உணரலாம். இனி 'ஹஸி' என்னும் வடமொழித் திரிபாகக்கொண்டு
அசிபண்ப என்பதற்கு நகத்தகுந்த அன்புடையோனே எனினுமாம்.
அசித்தல் - நகுதல் என்னும் பொருட்டாதல் "புள்ளெலாம். அசிப்ப
போன்று இருவிசும்பு அடைந்த வென்பவே" (காந்தருவ - 167) என
வரும் சீவகசிந்தாமணியினும் காண்க. 'பண்டெல்லாம் துவள் கண்டிலம்
இன்று துவள் கண்டீ' என்க. என்னோ - இதற்குக் காரணம் யாது. இனி
- இப்பொழுது. கொய்ததன் பொருட்டேனும் நேர்ந்திலளோ, செய்தது -
வணங்கியது. செப்பு - சொல்க. |
|
|
|