பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்9

அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே, திறன் இலோர்த்
திருத்திய தீது தீர் சிறப்பின் மறனும் - நன்னெறியிற்செல்லும்
திறனில்லாதவரை அந் நெறிக்கட் செல்லும்படி திருத்திய குற்றந்தீர்ந்த
சிறப்பினையுடைய மறமும், மாற்றலர்க்கு அணங்கும் நீ - இவ்வாற்றால்
நினக்குப் பகையாயினாரை வருத்துந் துன்பமும் நீயே, அங்கண் ஏர்
வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் - அழகிய இடத்தையும்
எழுச்சியினையுமுடைய வானத்தின்கண் அழகிய நிலவொளியோடே
விளங்கா நின்ற திங்களும், தெறுகதிர்க் கனலியும் நீ - சுடுகின்ற
சுடரினையுடைய ஞாயிறும் நீயே, ஐந்தலை உயரிய அணங்கு உடை
அருந்திறல் மைந்து உடை ஒருவனும் - ஐந்து தலைகளைத் தனக்குத்
தோற்றுவித்துக்கொண்ட கொல்லும் தொழிலையுடைய கடத்தற்கரிய
திறமையையும் வலிமையையும் உடைய ஒப்பற்றவனாகிய சிவபெருமானும்,
மடங்கலும் நீ - அவனாற் செய்யப்படுகின்ற ஒடுக்கத் தொழிலும் நீயே,
நலம் முழுதுஅளைஇய புகர்அறு காட்சிப் புலமும் - நன்மை முழுதும்
பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும், பூவனும்-
மலரின்மேலிருப்பவனாகிய பிரமனும், நாற்றமும் நீ - அப் பிரமனாலே
செய்யப்பட்ட படைப்புத்தொழிலும் நீயே, வலன்உயர் எழிலியும் -
வானின்கண் வலமாக எழுந்து உயரும் முகில்களும், மாக விசும்பும் -
மாகமாகிய வானமும், நிலனும் - அவ் வானத்தானே ஏந்தப்பட்ட
நிலவுலகமும், நீடிய இமயமும் நீ - அந் நிலத்தின்கண் நின்று உயர்ந்த
இமயமலையும் ஆகிய அனைத்தும் நீயே காண்.

      (வி - ம்.) 'விறல்மிகு விழுச்சீர் அந்தணர்' என்றது, பார்ப்பன
வாகைகொண்டு புகழ்பெற்ற அந்தணர் என்றவாறு. அவர்காக்கும் அறன்
என்றது, எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண் டொழுகுதலாகிய
அருளுடைமையை என்க: எனவே, அந்தணரிடத்துக் காணப்படும்
அருளும், நீ ஆர்வலர்க் கருளும் அருளுமாகிய இருவகையருளும் நீயே
என்றபடியாம். திறன் - நன்னெறிக்கட் செல்லும் ஆற்றல். மறன் -
வீரச்செயல்கள். மாற்றலர் - பகைவர். அணங்கு - துன்பம். மாற்றலர்க்கு
நீ செய்யும் துன்பம் என்க. தெறுகதிர்: வினைத்தொகை. கனலி - ஞாயிறு.
சிவபெருமான் தானே தனக்கு ஐந்து தலைகளை உண்டாக்கிக்கோடலின்
'ஐந்தலை உயரிய' என்றார். மடங்கல் - உலகு உயிர்கள் ஒடுங்குதல்.
புலம் - வேதம். பூவன் - பிரமன்; பூவிடத்துள்ளோன். நாற்றம் - நாறுதல்:
அஃதாவது தோன்றுதல். தோற்றுவித்தற் றொழில் என்க.

      எழிலி - முகில். மாகவிசும்பு: இருபெயரொட்டு. ஞானவெளியும்
மனவெளியும் உளவாகலின், மாகவிசும்பு எனப்பட்டது.

      அறமும் அளியும் மறனும் அணங்கும் திங்களும் ஞாயிறும்
அரனும் அயனும் அவர்செய் தொழிலும் விசும்பு முதலிய பூதமும்
பிறவுமாகிய