பக்கம் எண் :

பரிபாடல்- வையை90

      புனைபுணை - கட்டுமரம். தாழ்த்ததை: ஐகாரம் பகுதிப்பொருளது.

      வையை வரவு காமர்ப் பெருக்கன்றோ என்ற தலைவன் கூற்றினை
வையைப் பெருக்கம் காமப் பெருக்கை ஒத்தது என்றானாகக் கருதி மேலே
காதற்பரத்தை கூறுகின்றாள்.

      (பரிமே.) 61. இத் தளிர் கொய்தது பழையேனாதலான் நீ
இகழாநின்ற எனக்கு அன்று எப்பொழுதும் புதியராக விரும்பும்
மளிர்க்குக் கொய்தாய் என.

      62. மேல் தலைமகன்: நீ அறிந்தாய் அவைதாம் இவை; மெய்
யென்றான்; என்றது நீ அறிந்திலை; இத் தளிர்கள் அத் தன்மைய
அல்லவென்னும் குறிப்பிற்று.

      63. பண்டு எனக்கு நீ கொய்துழியெல்லாம் கடிதின் வருதலால்
தளிர் உருவத் துவட்சியுண்டோ?

      66. இஃது அவட்குக் கொய்து சென்று அவளால்
மறுக்கப்பட்டமையால் துவண்டது பாராய்.

71 - 74: ஆமாம் . . . . . . . . . . பிழை

      (இ - ள்.) ஆம்ஆம் அது ஒக்கும் - ஆமாம் நீ சொல்லுகின்றதும்1
பொருந்தும், காதல் அம் காமம் - காதலையுடைய அழகிய காமந்தானும்,
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ - ஒருமிக்க ஒரே தன்மையுடையதாய்
இருப்பதுண்டோ, ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் - சிலரிடத்து விரைந்து
சுருங்குதலானும் சிலரிடத்து விரைந்து பெருகுதலானும், வையைப்
பெருக்கு அன்றோ - இவ் வையையாற்றினது நீர்ப்பெருக்கினை
ஒப்பதாகின்றது, பெற்றாய் பிழை சூளுறல் - நீ வேண்டாது சூளுற்றுப்
பிழையுடையை யாயினாய் இனிச் சூளுறாதேகொள்;

      (வி - ம்.) தலைவன் கூற்றை இகழ்வாள் ஆம் ஆம் என
அடுக்கிக் கூறினாள். 'அது' என்றது தலைவன் 'வையை வரவு காமர்ப்
பெருக்கு' என்றதனை. ஒருக்க - ஒருமிக்க. என்றது தலைவன்
தலைவியர்பால் ஒரு விதமாக என்றவாறு அதற்குச் சான்று நீயே நினது
காமம் அங்ஙனமே சுருங்கியது என்பது குறிப்பு. சுருக்கம் - வற்றுதல்.
ஆக்கம் - பெருக்கம். இவ்விரு பொதுத்தன்மையானும் காமம் நீர்ப்
பெருக்கையே ஒக்கும்; நீ இப்பொழுது பொய்யே கூறுகின்றாய் என்பாள்.
'சூளுறல் பெற்றாய் பிழை' என்றாள். சூளுறல் சூளுறாதே கொள்.

      (பரிமே.) 71. காதற்பரத்தை அவள் காமப் பெருக்கம் வையை
வரவு ஒக்கும் என்றானாக உட்கொண்டு பின்னும் புலந்து கூறுவாள்.

75-78: அருகுபதி . . . . . . . வை

      (இ-ள்.) பொழி காரில் - முகில்கள் பொழிகின்ற இக்
கார்ப்பருவத்திலே, அருகு பதி ஆக எம்முடைய இருக்கை நின்