பக்கம் எண் :

பரிபாடல்- வையை98

   உழவர் களிதூங்க முழவு பணைமுரல
   ஆட லறியா அரிவை போலவும்
   ஊட லறியா உவகையள் போலவும்
   வேண்டுவழி நடந்து தாங்குதடை பொருது
20 விதியாற்றான் ஆக்கிய மெய்க்கலவை போல
   பொதுநாற்ற முள்ளுட் கரந்து புதுநாற்றம்
   செய்கின்றே செம்பூம் புனல்;
   கவிழ்ந்த புனலிற் கயந்தண் கழுநீர்
   அவிழ்ந்த மலர்மீ துற்றென வொருசார்
25 மாதர் மடநல்லார் மணலி னெழுதிய
   பாவை சிதைத்த தெனவழ வொருசார்
   அகவய லிளநெல் அரிகாற் சூடு
   தொகுபுனல் பரந்தெனத் துடிபட வொருசார்
   ஓதஞ் சுற்றிய தூரென வொருசார்
30 கார்தூம் பற்றது வானென வொருசார்
   பாடுவார் பாக்கங் கொண்டென
   ஆடுவார் சேரியடைந்தெனக்
   கழனிவந்து கால்கோத்தெனப்
   பழனவாளை பாளையுண்டென
35 வித்திடுபுல மேடாயிற்றென
   உணர்த்த வுணரா ஒள்ளிழை மாதரைப்
   புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து
   சினைவளர் வாளையிற் கிளையொடு கெழீஇப்
   பழன வுழவர் பாய்புனற் பரத்தந்
40 திறுவரை புரையுமாறிருகரை யேமத்து
   வரைபுரை யுருவி னுரைபல சுமந்து
   பூவேய்ந்து பொழில்பரந்து
   துனைந்தாடுவா ராய்கோதையர்
   அலர்தண்டா ரவர்காதிற்
45 றளிர்செரீ இக் கண்ணி பறித்துக்
   கைவளை யாழி தொய்யகம் புனைதுகில்
   மேகலை காஞ்சி வாகு வலயம்
   எல்லாங் கவரு மியல்பிற்றாய்த் தென்னவன்
   ஒன்னா ருடைபுலம் புக்கற்றான் மாறட்ட