50 தானையான் வையை வனப்பு;
புரிந்த தகையினான் யாறாடு வாருள்
துரந்து புனல்தூவத் தூமலர்க் கண்கள்
அமைந்தன வாங்க ணவரு ளொருத்தி
கைபுதைஇ யவளை
55 ஏக்கழுத்து நாணாற் கரும்பி னணைமென்றோள்
போக்கிச் சிறைபிடித்தா ளோர்பொன்னங் கொம்பு
பரிந்தவளைக் கைப்பிணை நீக்குவான் பாய்வாள்
இரும்பீர் வடியொத்து மைவிளங்குங் கண்ணொளியாற்
செம்மைப் புதுப்புனல் சென்றிரு ளாயிற்றே
60 வையைப் பெருக்கு வடிவு;
விரும்பிய வீரணி மெய்யீரந் தீரச்
சுரும்பார்க்குஞ் சூர்நறா வேந்தினாள் கண்ணெய்தல்
பேர்மகிழ் செய்யும் பெருநறாப் பேணியவே
கூர்நறா வார்ந்தவள் கண்;
65 கண்ணியல் கண்டேத்திக் காரிகைநீர் நோக்கினைப்
பாணா தரித்துப் பலபாட வப்பாட்டுப்
பேணா தொருத்தி பேதுற வாயிடை
என்னை வருவ தெனக்கென் றினையா
நன்ஞெமர் மார்ப னடுக்குற நண்ணிச்
70 சிகைகிடந்த வூடலிற் செங்கண்சேப் பூர
வகைதொடர்ந்த வாடலு ணல்லவர் தம்முட்
பகைதொடர்ந்து கோதை பரியூஉ நனிவெகுண்
டியாறாடு மேனி யணிகண்ட தன்னன்பன்
சேறாடுமேனி திருநிலத் துய்ப்பச் சிரமிதித்துத்
75 தீர்வில தாகச் செருவுற்றாள் செம்புனல்
ஊருட னாடுங் கடை;
புரிநரம் பின்கொளைப் புகல்பாலை யேழும்
எழூஉப்புணர் யாழு மிசையுங் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப
80 மன்மகளிர் சென்னிய ராடல் தொடங்கப்
பொருதிழி வார்புனற் பொற்பஃ
துருமிடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருத முன்றுறை சேர்புனற்கண் டுய்ப்பார்
|
|