பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்116

   ஏறதிர்க்கு மிந்திர னிருமுருமென
   மன்ற லதிரதிர மாறுமா றதிர்க்குநின்
35 குன்றங் குமுறிய வரை;
   தூதேய வண்டின் றொழுதி முரல்வவர்
   காதன்மூ தூர்மதில் கம்பலைத் தன்று
   வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி
   நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர்
40 ஆராக் காம மார்பொழிற் பாயல்
   வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி
   முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்
   அடியோர் மைந்த ரகலத் தகலா
   அலர்ஞெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி
45 புலரா மகிழ்மறப் பறியாது நல்கும்
   சிறப்பிற்றே தண்பரங் குன்று;
   இனிமன்னு மேதிலர் நாறுதி யாண்டுப்
   பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர்
   மாலைக்கு மாலை வரூஉம் வரைசூணில்
50 காலைப்போய் மாலை வரவு;
   இனிமணல் வையை யிரும்பொழிலுங் குன்றப்
   பனிமொழி சாரலும் பார்ப்பாரும்......
   துனியன் மலருண்கண் சொல்வேறு நாற்றம்
   கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது
55 துனிய னனிநீநின் சூள்
   என்பாணி நின்னி லெலாஅபாணி நீநின்சூள்
   சான்றாள ரீன்ற தகாஅத்த காஅமகாஅன்
   ஈன்றாட் கொருபெண் இவள்
   இருண்மையீ ருண்க ணிலங்கிழை யீன்றாட்
60 கரியளோ வாவ தறிந்திலே னீதா
   வருபுனல் வையைமண றொட்டேன் றருமணவேள்
   தண்பரங் குன்றத் தடிதொட்டேன் என்பாய்
   கேளிர் மணலின் கெழுவு மிதுவோ
   ஏழுலகு மாளி திருவரைமே லன்பளிதோ
65 என்னை யருளி யருண்முருகு சூள்சூளின்
   நின்னை யருளி லணங்கான்மெய் வேறின்னும்