பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்129

78 - 82: இடுதுனி . . . . . . . . தண்பரங்குன்று

      (இ - ள்.) இடு துனி கை ஆறுஆ என் இறை துயர் கூரச் சுடும்
- பின்னுந் தலைவன் தோழியை நோக்கி ஏடி யான் குற்றமிலேன்
ஆகவும் இவள் என்மேல் ஏறட்டுக் கூறிய இத் துனிக்காரணத்தை எனது
ஒழுக்கம் நெறியாகக் கொண்டு ஆராயப் புகுந்து இதனைப் பொய்ச் சூள்
என்றே துணிந்து என்னை இறைவன் துன்பமிகும்படி ஒறுப்பினும்
ஒறுக்கும், அடிசேர்ந்து ஆற்றிசின் - அங்ஙனம் இறைவன்
ஒறுக்குமுன்னரே நீ அவ் விறைவனுடைய திருவடியை அடைந்து வேண்டி
அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக என்று கூறிப் பின்னர்த் தன்
ஏவலிளையரை நோக்கி, சாற்றுமின் - இளையர்காள் நீவிர் சென்று யான்
கூறுமொழியை எல்லாரும் உணரும்படி கூறுங்கள், முருகன் தாள் தொழு
தண்பரங்குன்று - யாவரும் முருகப்பெருமானுடைய திருவடிகளைத்
தொழுதற்கிடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின்கண் யாமெல்லோரும்
சென்று, மிக மலர் ஏற்றுதும் - மிகவும் மலரைத் தூவுவோம், அவி
ஊட்டுதும் - இறைவனுக்கு ஊட்டும் அவிப்பொருளைஊட்டா நிற்போம்,
பாணி தோற்றுதும் - தாளத்தினையுடைய இசைப் பாட்டினைப்
பாடாநிற்பேம், கிணை எழுதும் - கிணைப்பறையின் முழக்கத்தை
எழுவிப்போம் என்றான்.

      (வி - ம்.) துனி - ஆகுபெயராய்த் துனிக்காரணமாகிய குற்றம்
என்னும் பொருட்டாய் நின்றது. பொய்க்குற்றம் என்பான் 'இடு துனி'
என்றான்; படைத்து மொழிந்த குற்றம் என்றவாறு. கை - ஒழுக்கம். ஆறு
- வழியாக. என் - என்னை. இறை - கடவுள். சுடும் - சுடுவது போன்று
ஒறுப்பான் என்றவாறு. ஆற்றிசின் - ஆற்றுவிப்பாயாக.

      இடுதுனி என்பது தொடங்கி ஆற்றிசின் என்னுந் துணையும்
தோழிக்குக் கூறியது. மேல் சாற்றுமின் என்பது தொடங்கி ஏவ
லிளையர்க்குக் கூறியது என உணர்க. அவி - கடவுட் பலிப்பொருள்.
'கேட்டுதும்' என்றும் பாடம். பாணி - தாளம். அதனையுடைய பாட்டிற்கு
ஆகுபெயர். கிணை - தடாரிப்பறை. தாடொழு எனற்பாலது எதுகை
நோக்கித் தாட்டொழுது என நின்றது.

      (பரிமே.) 'ஆற்றிசின்' என்றது, தோழியை நோக்கி. 'சாற்றுமின்'
என்றது தன் ஏவலிளையரை நோக்கி, உளப்பாடுகள் அவளையும்
அவரையும் நோக்கி.

83 - 89: தெரியிழாய் . . . . . . . சூள்

      (இ-ள்.) எல்லா என்னை (87) தெரியிழாய் செல்க என்றாய்
- ஏடா நீ என்னைநோக்கி முருகப்பெருமானை வணங்கி ஆற்றுவித்தற்கு
ஆராய்ந்த அணிகலன்களையுடைய நீயே செல்வாயாக என்று
கூறாநின்றாய், ஒருவர்க்கும் பொய்யாநின் வாய் இல் சூள் வௌவல்
யாம் பெற்றேம் - அங்ஙனம் நீ கூறியத

ப.--9