செயலாலே இவள் அருகில் இருப்பவன்
இவள் காதலனாக இருப்பன்
போலும், இவர்களைக் காண்மின்."
93-98: இவ்வாறு உவந்தவை காட்டாநிற்ப, மகளிரும், மைந்தரும்,
நீராடினர்; அவர்தம் அணிகலன்களிலிருந்து சிதறின மணிகள் நீரில்
நிறைந்தன; அவர் நீராடிய வார்த்தை ஊரின்கண் மலிந்தது; அவர் அழகு
அவ்வார்த்தையினும் மிக்கது; அவ்வழகு மிக்குப் பிறர் அழகோடு
மாறுகொண்டது; அவர் மார்பினின்று அழிந்து வீழ்ந்த தகரச் சாந்தாலே
மணல் சேறுபட்டது; அவர் ஆடையினின்றும் ஒழுகிய நீராலே கரை
கார்காலத்துத் தன்மை பெற்றது.
99-102: இந் நீர்விழவினால் வானுலகம் சிறப்பொழிந்தது; வையையே!
நின்னால் இம் மதுரையில் வாழுமாந்தர்க்கு இன்பமும், அழகும் பலப்பல
பலப்பல உளவாயின; அதனால் இவ்வுலகம் அகன்ற
இடமுடையதாயிருந்தும் நினது புகழைத் தன்பால் அடக்கமாட்டாதாயிற்று.
இவ் வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் தலைவர் நினைத்திலரே
(என்று தோழி தலைவன் கேட்பக் கூறினாள்.)
வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவின்று கிளையொடு மேன்மலை முற்றித்
தளிபொழி சாரற் றதர்மலர் தாஅய்
ஒளிதிக ழுத்தி உருகெழு நாகம்
5 அகரு வழைஞெமை ஆரம் இனையத்
தகரமு ஞாழலுந் தாரமுந் தாங்கி
நளிகடன் முன்னி யதுபோலும் தீநீர்
வளிவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர்தாஅய்
10 அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு
மின்னவி ரொளியிழை வேயு மோரும்
பொன்னடர்ப் பூம்புனை திருத்து வோரும்
அகில்கெழு சாந்த மாற்றி யாற்றப்
புகைகெழு சாந்தம் பூசு வோரும்
15 கார்கொள் கூந்தற் கதுப்பமைப் போரும்
வேர்பிணி பன்மலர் வேயு மோரும்
புட்டகம் பொருந்துவ புனைகு வோரும்
கட்டிய கயிலணி காழ்கொள் வோரும்
|
|
|
|