பக்கம் எண் :

பரிபாடல்- வையை209

    சுடுநீர் வினைக்குழையின் ஞாலச் சிவந்த
    கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செரீஇ
    விடுமலர்ப் பூங்கொடி போல நுடங்கி
 90 அடிமே லடிமே லொதுங்கித் தொடிமுன்கைக்
    காரிகை யாகத்தன் கண்ணி திருத்தினாள்
    நேரிறை முன்கை நல்லவள்கேள் காண்மின்
    துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று
    புனலென மூதூர் மலிந்தன் றவருரை
 95 உரையி னுயர்ந்தன்று கவின்;
    போரேற் றன்று நவின்று தகர
    மார்பழி சாந்தின் மணலளறு பட்டன்று
    துகில்பொசி புனலிற் கரைகா ரேற்றன்று
    விசும்புகடி விட்டன்று விழவுப்புன லாங்க
100 இன்பமுங் கவினு மழுங்கன் மூதூர்
    நன்பல நன்பல நன்பல வையை
    நின்புகழ் கொள்ளாதிம் மலர்தலை யுலகே.
என்பது கார்ப்பருவத்து வையைநீர் விழவணியிற் பல்வேறு
வகைப்பட்ட இன்பம் கூறி, இவ் வகைப்பட்ட இன்பத்தையுடைய
நின்னையும், நினைத்திலரென வையையை நோக்கித் தலைமகன்
கேட்பத் தோழி இயற்பழித்தது.

நல்வழுதியார் பாட்டு; * நந்நாகனார் இசை;
பண்ணுப் பாலையாழ்


உரை

1-8: வளி . . . . . . . . . . வையை வரவு

      (இ-ள்.) வளி பொரு வான் மின்னொடு இருள் பரப்பி, காற்றாலே
மோதப்பட்ட முகில் மின்னலையும் இருளையும் மாறி மாறிப் பரப்பி,
கிளையொடு மலைமேல் முற்றி - தன் சுற்றத்தோடே சென்று
சையமலையின்மேற் சென்று அதனைச் சூழ்ந்து கொண்டு, விளிவு இன்று
தளிபொழி - இடையறாது மழையைப் பொழியாநிற்ப, வையைத் தீநீர் -
வையையாற்றின்கண் காட்சிக்கினிய அந் நீர், சாரல் ததர் மலர் தாஅய்
- அம் மலைச்சாரலின்கண்ணே காற்றாலே உதிர்ந்த மலர்கள் தன்மேலே
பரக்க,
      * நன்னாகர் என்றும் காணப்படுகின்றது. ப.--14