னின்றும் உயர்ந்து மலர்ந்த
தாமரை என்க. வள் - வளவிய எனினுமாம்.
தொடியும் தோளணி வலயமும் பெரியை என்றது. அவையிற்றை
அணிவதற்குரிய உறுப்புக்களின் பெருமை கூறியபடியாம். உந்தி உலகம்
பூத்தலின் பெரிதாயிற்று. பெரியை முதலியன சினைப்பண்பு
முதல்மேனின்றன. அல்குல் - பின்புறம். மனம் - திருவுள்ளம். மறம் -
தீவினை.
(பரிமே.) 55. அன்பர் தம்குறை தம்முள்ளே கூறியும்
அறிதலால்
கேள்வி நுண்ணியை என்றார். அருளிச்செய்த அறத்தொடு, இடத்து
நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேனின்றது.
56. யாகத்தை விரும்புதலோடு மறம் வெவ்வியை.
57 - 60: அறாஅ . . . . . . . . . . மார்பினோய்
(இ-ள்.) அறாஅ மைந்தின் - நீங்காத ஆற்றலினையும்,
செறாஅச்
செங்கண் - சினத்தலானன்றி இயல்பாகவே சிவந்த கண்ணையும்,
செருமிகு திகிரி வெல்போர் செல்வ - போரின்கண் மேம்பட்ட
ஆழிப்படையாலே வெல்லாநின்ற போரினையும் உடைய திருவருட்
செல்வனே!, எரி நகை இடை இடுபு இழைத்த புரி மலர் துழாஅய்
நறுந்தார் மேவல் மார்பினோய் - நிறத்தாலே நெருப்பை யொத்த
வெட்சிமலரை இடையிட்டுத் தொடுத்த முறுக்குடைய மலரையுடைய
துளவமாகிய நறிய மாலை பொருந்துதலுடைய திருமார்பினை
உடையோனே!
(வி-ம்.) வரம்பிலாற்றல் என்பார், 'அறாஅ மைந்து'
என்றார்.
இயல்பாகவே சிவந்த கண் என்பார். 'செறாஅச் செங்கண்' என்றார்.
இறைவனுக்கு மாற்றாரிலராகலின் செறுதலின்மையும் உணர்க. செரு -
போர். திகிரி - ஆழிப்படை. செல்வம் - அருட்செல்வம். எரி - நெருப்பு.
நகை ஆகுபெயராய் மலர்க்காயிற்று. நகை - விளக்கம். மலர்ச்சி. எரிமலர
் எனவே, வெட்சிமலர்க்காயிற்று. இடுபு - இட்டு. புரிமலர் - முறுக்குடைய
மலர்; விரும்புதற்குரிய மலருமாம். மேவல் - பொருந்துதல்: மேலே தமது
விருப்பங்கூறி வேண்டுதலானே பன்முறையும் விளித்து எதிர்முகமாக்கினார்.
(பரிமே.) 59. எரியை ஒத்த வெட்சிமலர்.
60. மேவலையுடைய மார்பினோய்.
61-64: அன்னை . . . . . . . . . . . காமமிதுவே
(இ-ள்.) முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்
- பண்டும்
பண்டும் பற்பல பிறப்புக்களிலே யாம் செய்த தவப்பயன்
கூட்டுவித்தலானே, அன்னை என நினைஇ - நீ அத்தன்மை உடையை
என்று இப்பிறப்பினும் நினைந்து, நின் அடி தொழுதனெம் - நின்
திருவடியினைக் கைகுவித்துக் கும்பிட்டு, அடுக்கப் பன்மாண்
இறைஞ்சி வாழ்த்தினேம் - |
|
|
|