பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்245

அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கண் இருந்து குயில்கள்
கூவவும்,முழையிடத்தே எழுகின்ற எதிரொலி என்றும் ஒழியாது.

      46-48: அதனை நும் மனைவியரோடும் இருமுதுகுரவரோடும்
குழவிகளோடும் சுற்றத்தாரோடும் கூடித் தெய்வமாக மதித்துத் திசை
நோக்கித் தொழுது செல்லுமின்.

      49-53: தாமரைபோன்ற திருக்கண்களையும், மேகத்தையும்,
நீலமணி முதலியவற்றையும் ஒத்த திருமேனியையும் உடையவனாய்,
எல்லா வுலகத்தும் வெளிப்பட்டு உயிர்க்கூட்டங்களின் பிறவித்
துன்பத்தைஅகற்றும் திருமால், அக்குன்றத்தே ஆர்வத்தோடு
எழுந்தருளியிருக்கின்றான்.

      54-66: திருமாலே! நீ துளவமாலையினையுடையை; நீல
மலைபோன்றனை; ஒளிமிகவுடையை; ஒற்றைக்குழையினையுடையை!
கருடக்கொடியை உடையை; கலப்பையை உடையை; சங்கு முதலிய
ஐந்து திருப்படைக்கலனை யுடையை; இவ்வாறு வேதம் அவன்
பெருமை கூறுதலானே யாமும் யாமறியளவையின் கூறித்
திருமாலையும் பலதேவனையும் தொழுது
அத் திருமாலிருஞ்சோலை மலையின் அடியிலுறைந்து வாழும்
பேறு எமக்கு அருள்க! என வேண்டுவேமாக.

   புலவரை அறியாப் புகழொடு பொலிந்து
   நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்
   தொலையா நேமிமுதல் தொல்லிசை யமையும்
   புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்
 5 பலவெனின் ஆங்கவை பலவே பலவினும்
   நிலவரை யாற்றி நிறைபயன் ஒருங்குடன்
   நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே
   சிலவினுஞ் சிறந்தன தெய்வம் பெட்புறும்
   மலரகன் மார்பின் மைபடி குடுமிய
10 குலவரை சிலவே குலவரை சிலவினும்
   சிறந்தது கல்லறை கடலுங் கானலும் போலவும்
   புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
   எல்லாம், வேறுவே றுருவின் ஒருதொழில் இருவர்த்
   தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
15 நாறிணர்த் துழாயோ னல்கின் அல்லதை
   ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்