பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்246

   அரிதிற்பெறு துறக்க மாலிருங் குன்றம்
   எளிதிற் பெறலுரிமை ஏத்துகஞ் சிலம்ப
   அராவணர் கயந்தலைத் தம்முன் மார்பின்
20 மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
   அலங்கு மருவி ஆர்த்திமிழ் பிழியச்
   சிலம்பா றணிந்த சீர்கெழு திருவிற்
   சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்
   தாம்வீழ் காமம் வித்துபு விளைக்கும்
25 நாமத் தன்மை நன்கனம் படியெழ
   யாமத் தன்மையிவ் வையிருங் குன்றத்து
   மன்புனல் இளவெயில் வளாவவிருள் வளர்வெனப்
   பொன்புனை உடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
   நினைமின் மாந்தீர் கேண்மின் கமழ்சீர்
30 சுனையெலா நீல மலர்ச் சுனைசூழ்
   சினையெலாஞ் செயலை மலர்க் காய்கனி
   உறழ நனைவேங்கை ஒள்ளிணர் மலர
   மாயோ னொத்தஇன் னிலைத்தே
   சென்றுதொழு கல்லீர் கண்டுபணி மின்மே
35 இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
   பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது
   கண்டுமயர் அறுக்குங் காமக் கடவுள்
   மகமுயங்கு மந்தி வரைவரை பாய
   முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட
40 மணிமரு ணன்னீர்ச்சினை மடமயில் அகவக்
   குருகிலை உதிரக் குயிலினங் கூவப்
   பகர்குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
   நாநவில் பாடல் முழவெதிர்ந் தன்ன
   சிலம்பிற் சிலம்பிசை ஓவா தொன்னார்க்
45 கடந்தட்டான் கேழிருங் குன்று;
   தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
   கைம்மக வோடுங் காத லவரொடும்
   தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்
   புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
50 வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன்