பக்கம் எண் :

பரிபாடல்- வையை 261

பூத்த புகையும் அவியும் புலராமை
மறாஅற்க வான மலிதந்து நீத்தம்
அறாஅற்க வையை நினக்கு. (55)
என்பது, காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன் தோழியை
வாயில்வேண்ட அவள் புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது.

நல்லழிசியார் பாட்டு; நல்லச்சுதனார் இசை; பண் நோதிறம்.

உரை

1 - 10: கரையே . . . . . . . வருமே

(இ-ள்.) (19) வையை வரவு - வையையாற்றின்கண் வெள்ளம் பெருகிவரும்
வருகையினாலே, மைபடு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் - முகில்கள்
படியும் மலையிடத்துளவாகிய மிளகினோடும் சந்தன மரத்தினோடும்,
நெய்குடை தயிரின் நுரையொடும் - வெண்ணெய் படுதற்பொருட்டுக்
கடைதற்குக் காரணமான தயிர்போன்ற நுரையொடும், பிறவொடும் - மலர்
பொன் மணி முதலிய பிறபொருள்களோடும் அந் நீர் பெருகி, கரை
எவ்வயினாலும் - வையையின் கரையில் எவ்விடத்தும்
அப் பொருள்களை, கை வண் தோன்றல் ஈகை போன்ம் என -
இச் செயல் கைவண்மையுடைய பாண்டியனது ஈகையையே ஒப்பதாம்
எனக் கண்டோர் கூறும்படி, மீதுமீது அழியும் - மேலும் மேலும்
வாரிவாரித் தன் அலைக்கரங்களாலே வீசி அக்கரையினை அழியாநிற்கும்,
துறை - இனிப் பிற நீராடுந் துறைகடோறும், வலஞ்சுழி கலங்கல்
அம் புனல் - வலம் சுழித்துப் பாயும் கலங்கலையுடைய அழகிய
அந் நீர் ஆண்டாண்டு நீராடுவாரது, நேர்பு முத்துப்புணர் காழ் மத்தக
நித்திலம் பொலம்புனை அவிர் இழை மணி உந்திய - தம்முள் ஒத்து
முத்துச் சேர்ந்த வடம் தலைக்கோலமுத்து பொன்னாலே இயற்றிய
விளக்கமுடைய அணிகலன்கள் மணி முதலிய தன்னால்
உந்தப்பட்டவற்றை, திணைபிரி புதல்வர் - தம் இல்லிடத்தினின்றும்
பிரிந்து தமியராய் நீராடிய சிறுவர்களுடைய, கயந்தலை முச்சிய
முஞ்சமொடு தழீஇ - மெல்லிய தலைமுச்சியிடத்தனவாகிய முஞ்சம்
என்னும் அணிகலனோடு சேரக்கொண்டு, அரிதத்துகண்ணார் தம்தம்
துணையோடு ஒருங்குடன் ஆடும் தலைத்தலை வரும் - செவ்வரி
கருவரி ஓடிய கண்களையுடைய மகளிர் தங்கள் தங்கள்
காதற் றுணைவரோடே