"வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி" (7: 43) எனவரும்
மணிமேகலையானும் உணர்க.
அங்ஙனம் கமலவர்த்தனை காட்டுங்கால் ஆடன்மகளிர்
ஆண்டு
எழனியில் எழுதப்பட்ட வருணப்பூதர்க்குப் பூவும் நீருந் தூவி வழிபடுதல்
உண்மையை, ஆசிரியர் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்தே
அரங்கேற்று காதையில் "தோற்றிய வரங்கிற் றொழுதன ரேத்த மேனிலை
வைத்து" (107) என்ற அடிக்கு. "இப்படியாகச் சமைக்கப்பட்டு நூல்
சொல்லுகின்றபடியெல்லாம் தோன்றிய அரங்கென்க: அந்தணர் அரசர்
வணிகர் சூத்திரர் என்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும்
எழுதி மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்க வைத்தென்க" என
நிறுத்திய நல்லுரையானும் உணர்க.
மிகூஉம் - நெருங்கும். நரந்தம் - நரந்தம்பூவாற்
செய்ததொரு
நறுமணப் பொருள் என்க.
எதிர் விருந்தயர்வபோல் நறுமலர் நன்களிக்கும்
என இயைக்க.
காக்கள் நீர் தமக்களித்த விருந்திற்கு எதிர்விருந்து
அளிப்பன
போன்று மலர் அளிக்கும் என்க.
'கானலங் காவும்' என்புழி, கான் அல் அம் காவும்
எனக்
கண்ணழித்துக்கொள்க. இவற்றுள், கான் - மணம். அல்லும் அம்மும்
சாரியைகள். கயம் - குளம். துருத்தி - ஆற்றிடைக்குறை. தேன்
தேனுண்டு என்புழி முன்னையது வண்டு; பின்னையது கள்.
வையை நீர் வரவானே யாண்டும் மலர்கள் நிறைய மலர்ந்து
பொலிவுற்றன என்பதாம். பாட என்னும் செயவெனெச்சம் நெல் விளைய
மழைபெய்தது என்புழிப் போலக் காரியப் பொருட்டாய் நின்றது.
பூத்தன்று - பொலிந்தது.
(பரிமே.) 11. விடுமலர் சுமத்தலும் பூநீர் நிறைதலும்
வயலுக்கும்
அரங்கிற்கும் சிலேடையாகலின், வயலுக்கு அவிழ்ந்த மலர்களைச் சுமந்து
பொலிந்த நீர்நிறைதலாகவும், அரங்கிற்குக் கமலவர்த்தனைக் கண் தூவிய
மலர்களைச் சுமந்து பூதர் அருச்சனைப் பூவும் நீரும் நிறைதலாகவும் உரைக்க.
17 கானலங்கா வென்புழி அல்லும் அம்முஞ் சாரியை.
20-31: சுருங்கையின் . . . . . . . . . வையைவரவு
(இ-ள்.) (31) வையை வரவு - இவ் வையையாற்றினது
வெள்ள
வருகை மேலும், ஆயத்தார் சுற்று சுருங்கையின் எறிந்து - நீராடிக்
கரைசேர்ந்த மகளிர்களுள் வைத்து ஆய மகளிர் ஒரு காதற்பரத்தையைச்
சூழ்ந்து நின்று மூங்கிலாலாகிய துருத்தியினாலே அரக்குநீரை வீசாநிற்ப,
குரும்பை முலைப்பட்ட பூநீர் துடையாள் - அப் பரத்தை தன்னுடைய
தெங்கிளங்காயை ஒத்த முலைகளின் மேலே பட்ட பொலிவுடைய
அவ் வரக்குநீரைத் துடையாதவளாய், இருந்துகில் தானையின் |
|
|
|