பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்299

    அவ்வரை யுடைத்தோய்நீ இவ்வரை மருங்கிற்
    கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்
105 உடங்கமர் ஆயமொ டேத்தினந் தொழுதே.
கடவுள் வாழ்த்து நப்பண்ணனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார்
இசை; பண் காந்தாரம்.

உரை.

1 - 7: நிலவரை . . . . . . . . . வதுவை

      (இ - ள்.) (36) குருகு ஏறி வேலோய் - கிரௌஞ்சம் என்னும்
மலையை உடைத்த வேற்படையை யேந்திய பெருமானே!, வான் உறை
புகல் அழுவத்து நிலவரையான் தந்து - நீ வானவர் உலகிலே
உறைதற்குக் கொண்டுள்ள அத்துணை விருப்பமே கடல் சூழ்ந்த இந்நில
எல்லையிலே உறைதற்கும் கொண்டு, புலவரை அறியாத புகழ் பூத்த
கடம்பு அமர்ந்து - அறிவு எல்லையால் அறியப்படாத
பெரும்புகழையுடைய கடப்பமரத்தின்கண் பொருந்தி, அரு முனி மரபின்
ஆன்றவர் நுகர்ச்சி இரு நிலத்தோரும் இயைக மன் என - பெறுதற்கரிய
தலைமைத் தன்மை யான் நிரம்பிய தேவர்கள் நின் திருவடி தொழுது
பெறாநின்ற இன்பத்தினை இந்தப் பெரிய மண்ணுலகத்து வாழும்
மக்களும் எய்தி உய்க எனத் திருவுளத் தடைத்து, ஈத்த நின் தண்பரங்
குன்றத்து - எழுந்தருளி நின் திருவடி தொழுதலாகிய அப் பேரின்பத்தை
நல்கிய இத் தண்ணிய திருப்பரங் குன்றத்திலே, இயல் அணி மயில்
கொடி வதுவை - நீ ஆடுகின்ற அழகிய மயில்போன்ற வள்ளியைத்
திருமணம் புரிந்தருளும் இச் செயல், துறக்கத்து நின் மருங்கு சாறுகொள்
அவளொடு மாறுகொள்வது போலும் - அவ்வானவர் உலகத்திலே நின்
பக்கலிலே அமர்ந்து விழாக்கொண்ட அவ் வானவர் மகளாகிய
தேவசேனையினது திருமணத்தோடு மாறுபட்டதொரு செயல்போலும்;

      (வி - ம்.) நிலவரை - நில எல்லை. அழுவம் - கடல். அழுவத்து
நிலவரையான் என மாறுக. நிலவரையான்: உருபுமயக்கம். வானுறை புகல்
- வானுலகில் உறைதற்குக் காரணமான விருப்பம் என்க. வானுலகிலே
உறையும் அவ்வளவு விருப்பத்தோடேயே இந் நிலவுலகத்தினும் உறைந்து
என்றவாறு.

      வானுலகின்கண் உறைந்து அவ் வானவர்க்கு அணுக்கனாய்
இருந்து காட்சியின்பம் நல்கினாற் போன்று, இம் மண்ணவர்க்கும்
அணுக்கனாய் இருந்து இவர்க்கும் பேரின்பம் நல்கும் பொருட்டுத் திருப்பரங்